லேடி வழியில் இல்லை; மோடி வழியில் போகும் அதிமுக… எச்சரித்த கி.வீரமணி!

பாஜகவின் பொம்மலாட்டத்தில் சிக்கியுள்ளதால் அதிமுகவிற்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், லேடி வழியில் போகவில்லை மோடி வழியில் ஆபத்தில் செல்கிறது அதிமுக என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள குருவரட்டியூரில் திராவிடர் கழகத்தின் ஈரோடு மண்டல தலைவராக இருந்த பிரகலாதனின் நினைவாக கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு கொடி கம்பம் ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்தார், மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திமுக துணை. பொதுச்செயலாளர் அந்தியூர்.செல்வராஜ் எம்.பி. சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி வெங்கடாசலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநில உரிமை மீட்பு விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது, இதில் பங்கேற்றபின் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் வீரமணி பேசுகையில். பாஜக ஆட்டுவிக்கின்ற பொம்மலாட்டத்திற்கு சிக்கி உள்ளதால் அதிமுகவிற்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது,

பொன்விழாவை கொண்டாடி மகிழ வேண்டிய இந்த காலகட்டத்தில் அதை புண் விழாவாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள், பல குழுக்களாக தற்போது பிரிந்து கிடப்பதற்கு காரணம் பாஜகவோடு கூட்டு வைத்தது தான், சேரகூடாத இடத்தில் சேர்ந்துதான் மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கி இருக்கிறார்கள்

தாங்கள் அடமானப் பொருள்களாக இல்லாமல் சுதந்திரமானவர்களாக ஆக்கிக் கொண்டால்தான் அவர்களில் உண்மையான தலைமையைப் பெற்றவர் ஆவர்கள்.ஒற்றை தலைமையா.. இரட்டை தலைமையா அல்லது மூன்று தலைமையா என்று ஆய்வுகள் செய்வதை விட முதலில் தாங்கள் சரியாக இருக்கிறோமா சுதந்திரமாக இருக்கிறோமா அல்லது நிபந்தனைகள் உள்ள ஒரு அடிமைகளாக ஆக்கப்பட்டு இருக்கிறோமா,

இல்லையானால் உங்கள் கட்சியை உடைப்போம் உங்கள் சின்னத்தை பறிப்போம் என்று சொல்வது யார் என்பதை புரிந்து கொண்டால் பழைய காலத்தை நினைத்து பார்த்தால் நிச்சயமாக இது லேடி வழியில் போகவில்லை மோடி வழியில் போகிறது என்ற ஆபத்தை புரிந்து கொள்வார்கள் என தெரிவித்தவர்,அக்னிபத் திட்டம் மூலம் நான்காண்டுகள் பணி முடித்த பின்பு அவர்களின் எதிர் காலம் என்ன ஆகும், ஒருவேலை அவர்கள் தீவிரவாதிகள் ஆனால் நாட்டின் நிலை என்ன ஆகும் இது சிந்திக்க வேண்டிய விஷயம்,

பாஜக- வால் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வர முடியாத காரணத்தினால் யார் மக்களுக்கு ஆட்சி செய்கிறார்களோ அவர்களை விலைக்கு வாங்குவதற்கு நன்றாக பழகி இருக்கிறார்கள்,

பணம் ஏராளம் இருக்கிறது, சக்தி இருக்கிறது ஆகவே தான் விலைக்குத் தேடுகிறார்கள், எனவே அவர்கள் அரசியல் சந்தையில் யார் யார் விலைக்குப் போகக் கூடியவர்கள் என தேடிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை அவர்கள் நம்பவில்லை, கார்ப்பரேட்டுகளை நம்புகிறார்கள்‌ என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.