அதிமுக முன்னாள் அமைச்சர் திடீர் கைது; குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்!

மதுரை கப்பலூர் டோல்கேட்டை முன்னுரிமை அடிப்படையில் அகற்றக்கோரி திமுக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குண்டு கட்டாக போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கப்பலூர் டோல்கேட் அருகில் திறந்த வெளியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் போராட்டத்தில் பங்கேற்றார்.

அவருடன் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன், அந்த பகுதியில்உள்ள கப்பலூர் தொழில்பேட்டை பேட்டை தலைவர் ரகுநாதராஜா, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க செயலாளர் செல்வம், பொருளாளர் ஸ்ரீதர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிமுக தொண்டர்கள் மற்றும்  200க்கும் மேற்பட்டோர் தங்கள் ஆதரவை தெரிவித்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது டோல்கேட் அருகே போராட்டத்தில் பங்கேற்றனர்.

காவல்துறை போராட்டம் நடத்த கூடாது என்று கடுமையாக கூறினர் தொடர்ந்து நாங்கள் மக்களிடத்தில் கையெழுத்து இயக்கம் பெற்று வருகிறோம் அதன் பின்பு நாங்கள் சொல்கிறோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறும் போது தொடர்ந்து காவல்துறை கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் உசிலம்பட்டி தொகுதி. எம்.எல்.ஏ ஐயப்பன் ஆகியோரையும் காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…