ஜூலை 11ம் தேதியோட ஓபிஎஸ் ஆட்டம் ஓவர்; எடப்பாடி போட்ட மாஸ்டர் பிளான்!

வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.

கடந்த மாதம் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு – பொதுக்குழுவில் நிறைவேற்றப்படுவதாக இருந்த 23 தீர்மானங்களுன் நிராகரிக்கப்பட்டன. பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று, மீண்டும் பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறும் என அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மேடையிலேயே அறிவித்தார்.

அதன்படி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் மீண்டும் பொதுக்குழு நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தலைமைக்கழக நிர்வாகிகளுக்கு தலைமைக்கழக நிர்வாகிகள் சார்பாக தனித்தனியே அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்குவதற்கான சட்டதிருத்தம் மேற்கொள்ளப்பட்டு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளன.

மேலும் தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்னைகள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published.