இந்த கொடுமை எல்லாம் அதிமுகவில் தான் நடக்கும்… கொந்தளித்த ஓபிஎஸ் ஆதரவாளர்!

சொந்தக் கட்சி நிர்வாகிகளையே விலைக்கு வாங்கும் கொடுமையான நிகழ்வை எடப்பாடி அரங்கேற்றி வருவதாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரத்ன சபாபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தற்போது ஓபிஎஸ் ஆதரவாளமான ரத்ன சபாபதி செய்தியாளர்களிடம் பேசுகையில்

கடந்த காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி அடையாளம் காட்டிய சசிகலாவையே எடப்பாடி அதிமுகவிற்கு வெளியேற்றினால் இதன் பின்னர் ஓபிஎஸ் இபிஎஸ் இணைவதற்கும் சசிகலாவை கட்சியில் இணைப்பதற்கும் நான் பல்வேறு வகையில் முயற்சி செய்தேன் அப்பொழுதும் முதலமைச்சர் பதவியை தக்க வைப்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி தான் இணைப்பிற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை

தற்போது ஒற்றை தலைமையை என்ற முழக்கத்தை வைத்து ஓ பன்னீர்செல்வத்திற்கு தொந்தரவுகளை கொடுத்து வருகிறார். ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரையும் இணைப்பதற்கு நான் அப்போது இணைப்புக்கு முயன்ற நிலையில் தற்போதும் இணைய வைப்பதற்கு முயற்சி செய்தேன். அதற்கு இபிஎஸ் இடம் நேரடியாக பேசியபோது எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்னை சுற்றி இருப்பவர்கள் தான் இதற்கு காரணம் என்று அவர் தனது பொறுப்பை தட்டிக் கழிக்கிறார்.

தங்களிடம் உள்ள பணத்தை வைத்து அதிமுகவை விலக்கி வாங்கி விடலாம் என்று எடப்பாடி நினைக்கிறார். அதற்கு அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டார்கள்
சொந்தக் கட்சி நிர்வாகிகளையே விலைக்கு வாங்கும் கொடுமையான நிகழ்வை எடப்பாடி அரங்கேற்றி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…