மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் சபாநாயகர் பதவியை கைப்பற்றினார் ராகுல் நர்வேகர்..!

மகாராஷ்டிராவில் நிலவும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில் உத்தவ் தாக்கரேவின் ராஜினாமாவை தொடர்ந்து,ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை மணிக்கு தொடங்கியது.

அதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி சார்பில் ராகுல் நர்வேகர் மற்றும் சிவசேனா கட்சி சார்பில் ராஜன் சால்வி ஆகியோர் போட்டியிட்டனர்.

Maharashtra political crisis live updates, 3 July: Eknath Shinde expelled  from Shiv Sena

பாஜக, சிவசேனா கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்ட 160- க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ராகுல் நர்வேகருக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியை சேர்ந்த ராகுல் நர்வேகர் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சபாநாயகராக தேர்வான ராகுல் சர்வேகரை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் அவரை சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். 

அப்போது ஜெய் பவானி, ஜெய் சிவாஜி, மற்றும் வந்தே மாதரம் என்று பாஜக கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.

குண்டர்களை வைத்து மிரட்டும் தனியார் வங்கி அதிகாரிகளை கைது செய்க: ராமதாஸ் வலியுறுத்தல்!!

கடனை கட்டாததற்காக தனியார் வங்கி அதிகாரிகள் அவமானப்படுத்தியதால் மனம் உடைந்த கடலூர் மாவட்டம்…