தேசிய இனங்களுக்கு கூட்டாட்சி உரிமை வழங்க வேண்டும் – பழநெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணி அமைப்பின் சார்பில் தஞ்சாவூர், திருச்சி மண்டலங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகளுக்கான செயல் வீரர் பயிற்சி முகாமை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழநெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பழநெடுமாறன் விடுதலை புலிகள் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு பேரறிவாளனுக்கு பொருந்து வதை போல மற்ற 6 பேருக்கும் பொருந்தம் ஏழு பேருக்கும் ஒரே காலத்தில் வழங்கப்பட்ட தண்டனை விடுதலைக்கான காரணம் ஆறு பேருக்கும் உறுதியாக பொருந்தும் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாக நடவடிக்கையை எடுக்கும் என்று நம்புகிறேன். பாரதிய ஜனதா கட்சியும் தமிழ் தேசியமும் எதிர் எதிரான கருத்துக்களை கொண்டது பாரதிய ஜனதா கட்சி ஒரே பாரதம் சமஸ்கிருதம் ஒரே மொழி என்ற கொள்கையில் செயல்படுகிறது. தமிழ் தேசிய கட்சி மொழி வாரியாக மட்டுமே தேசிய இனங்களைக் கொண்ட நாட்டை உருவாக்க முடியும் என்று கூறுகிறது.

மேலும் நாங்கள் தேசிய இனங்களுக்கு கூட்டாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று கூறுகிறோம் புதிய கூட்டாட்சி தத்துவத்தை உருவாக்க வேண்டும் மொழி அடிப்படையில் தேசிய இனங்களை உருவாக்க வேண்டும் இதனைத் தான் ஐநா சபையும் ஏற்றுக் கொண்டு சட்டம் இயற்றி இருக்கிறது ஆனால் அதற்கு மாறாக பாரதிய ஜனதாவின் கொள்கை உள்ளது . அரசியல் அமைப்பு சட்டத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும் புதிய கூட்டாட்சி தத்துவம் வேண்டும் தற்போதைய சட்டத்தினை அனைத்தையும் தற்போதைக்கு ஏற்ப மாற்ற வேண்டும் குடியரசு தலைவர் தேர்தலில் நாங்கள் எந்த கருத்தும் சொல்லவில்லை ஏனென்றால் நாங்கள் தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின் படி நடைபெறும் இந்த குடியரசு தலைவர் தேர்தலை தேர்தலில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து மனிதாபிமானம் அடிப்படையில உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

எங்களுக்கு கிடைக்கும் தகவலின்படி இவை ஈழத்தமிழர்களுக்கு முறையாக சென்றடைவது கிடையாது செந்தமிழர்கள் ஈழ தமிழர்கள் என அனைவருக்கும் உதவி செய்வதை நாங்கள் எதிர்பார்க்கிறோம் எனவே அரசு சார்பில் உதவிகளை செய்வதை தவிர்த்து செஞ்சிலுவை சங்கம் சார்பில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு இலங்கையை வலியுறுத்த வேண்டும் இப்போது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறார்கள் இது ஜனநாயக விரோத செயலாகும் தங்களை நம்பி வாக்களிக்கும் மக்களுக்கு எம்எல்ஏக்கள் துரோகம் செய்யக்கூடாது எம்எல்ஏக்கள் கட்சி மாறினால் அவர்களது பதவி பறிபோக வேண்டும் அனைத்து மாநில ஆளுநர்களும் அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்கள்.

அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்திற்கு எதிராகவும் நேரு அளித்த வாக்குறுதிக்கு எதிராகவும் தான் தற்போது ஆளுநர்கள் செயல்பட்டு வருகின்றனர் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது அவர்களுக்கு ஆதரவானவர்களோ ஆளுநர்களாக நியமிக்கப்படுகிறார்கள் ஓய்வு பெற்ற நீதி அரசர்கள் போன்றோர் ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் மாநில அமைச்சரவைக்கு அதிகாரமா அல்லது டெல்லியின் பிரதிநிதிக்கு அதிகாரமா என்று தற்போது போட்டி நடைபெறுகிறது இதற்கு தான் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தி ஆளுநரை கூட மாநில அரசே தேர்வு செய்ய வேண்டும் என்று கூட மாற்றலாம் ஆனால் மாநில அமைச்சரவைக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்க வேண்டும் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published.