குடும்ப ஆட்சி விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் – உள்துறை அமைச்சர் அமித்ஷா

பாஜகவின் செயற்குழு கூட்டம் 2வது நாளாக  இன்று  ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 2024ம் ஆண்டுக்குள் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்படும். 

Amit Shah reaches Hyderabad to take part in BJP's GHMC poll campaign- The  New Indian Express

அசாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு இடையில் கடந்த 50 ஆண்டு காலமாக இருந்த எல்லை பிரச்சனை கடந்த மார்ச் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முடிவுக்கு வந்துள்ளது. 

இரு மாநில முதல்வர்களும் இதில் கையெழுத்திட்டு எல்லைப் பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளனர். அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் பாஜகவின் காலமாக இருக்கும். இந்தியா உலக நாடுகளின் தலைமையாக மாறும். 

ஹைதராபாத் மூலம் தெலங்கானாவையே குறிவைக்கும் மோடி-அமித் ஷா | Modi-Amit Shah  targeting Telangana through Hyderabad | Puthiyathalaimurai - Tamil News |  Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

மேலும் தென் மாநிலங்களான ஆந்திரா, தமிழகம், தெலுங்கானா மாநிலங்களில் பாஜக விரைவில் அதிகாரத்தை பிடிக்கும் என குறிப்பிட்டார்.  மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடந்து வரும் குடும்ப ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும்.

Leave a Reply

Your email address will not be published.