நாளை அவமதிப்பு வழக்கு விசாரணை: இபிஎஸ் தீவிர ஆலோசனை!!

கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் என்பது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் வரும் காலங்களில் அதிமுகவில் ஒற்றை தலைமை தான் இருக்க வேண்டும் என்று போஸ்டர்கள் மற்றும் கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இல்லை என்றும் அவருடைய பதவி காலாவதி ஆகி விட்டதாக கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் கடந்த மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றாமல் இருப்பதற்கு அனுமதி தராத நிலையில் வரும் 11-ம் தேதி நடைப்பெறும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுவதை தடுக்க ஓபிஎஸ் தரப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதே சமயத்தில் தலைமை கழகம் அழைப்பு என்ற பெயரில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பது ஏற்புடையது அல்ல என்று ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில் இதனை தடுக்கும் விதமாக நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

இதனால் நாளை வரும் தீர்ப்பில் ஓபிஎஸ்-க்கு சாதகமான வாய்ப்புகள் இருப்பதால் தற்போது இபிஎஸ் தரப்பில் முக்கிய ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த கூட்டதில் ஓபிஎஸ்-க்கு எதிராக பல்வேறு தீன்மானங்கள் கொண்டுவருவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.

75 வது சுதந்திர தினம்: இந்தியாவை உருவாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் – திரௌபதி முர்மு

இந்திய நாட்டின் பாதுகாப்பு, பராமரிப்பு, முன்னேற்றம், நல்வளம் காக்க அனைவரும் முன்வர வேண்டும்…

தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை…