பத்திரப்பதிவுத்துறை ஊழியர்களை எச்சரித்த அமைச்சர்!

Moorthi

மதுரை உத்தங்குடியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வட்டார அளவிலான இளைஞர்கள் திறன் திருவிழா வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றுது, நிகழ்வில் ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் 500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.

வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், வெளிநாட்டு தொழில் முதலீடுகள் தமிழகத்திற்கு கொண்டு வரும் நடவடிக்கையில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார்.தமிழகத்தில் விரைவில் வேலை இல்லை என்கிற நிலை மாற்றியமைக்கப்படும்.

வணிக வரி கட்டாத டீலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.நோட்டீஸ் அனுப்பியதன் பேரில் 67 கோடி ரூபாய் அளவில் வணிக வரி வசூலிக்கப்பட்டது.

முதியோர்கள் பத்திரப்பதிவு செய்ய வந்தால் அவர்களை காத்திருக்க வைக்க கூடாது. முதியோர்களை காத்திருக்க வைக்கும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

போலி பத்திரங்களை கண்டறிந்து பதிவாளர்களே பத்திரங்களை ரத்து செய்ய அதிகாரங்கள் வழங்கும் சட்ட முன் வடிவிற்கு மத்திய அரசு ஒரு மாதத்தில் ஒப்புதல் அளிக்கும். யாருடைய தனிப்பட்ட உரிமையில் முதல்வர் தலையீடுவதில்லை.

திமுகவிலும் ஆன்மிகவாதிகள் உள்ளனர்.தமிழகத்தில் மதத்தை வைத்து தவறான அரசியல் நடத்தி விட கூடாது என்பதே எங்களின் எண்ணம்.மக்களின் தனிப்பட்ட உரிமைகளை நிலைநாட்டுவதே திராவிட மாடல் ஆட்சி எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.