இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா..!

இந்தியாவின் 16 வது குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பாக வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

இந்த குடியரசுத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக வேட்பாளர் திரௌபதி முர்மு மற்றும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகின்றனர்.

Read all Latest Updates on and about ஜனாதிபதி தேர்தல்

ஏற்கனவே திரௌபதி முர்மு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். இந்த நிலையில், இன்று எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

இன்று காலை மாநிலங்களவை செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர்களின் முன்னிலையில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். குடியரசுத் தலைவர் போட்டி குறித்து யஷ்வந்த் சின்ஹா நான் யார் திரௌபதி முர்மு யார் என்பதற்கான போட்டி இது அல்ல என குறிப்பிட்டார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்காவுக்கு ‘Z’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது  குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *