திராவிட மாடல் அரசை – கொச்சைப்படுத்தும் வடமாநில ஊடகங்களுக்குக் கண்டனம்..!!!

இன்று மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1

இரங்கல் தீர்மானம்

தீர்மானம் எண்: 2

‘விடுதலை’ ஆசிரியராக 60 ஆண்டுகள் பணியாற்றிய தலைவருக்கு

60 ஆயிரம் சந்தாக்கள் அளித்தல்!

தீர்மானம் எண்: 3

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் என்பது 1860 ஆம் ஆண்டு முதல் பேசப்பட்டு வருகிறது. அவ்வப்போது பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டது.

சுதந்திர இந்திய நாட்டில் கூட 5 திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டன. நாடாளுமன்றத்தில் அண்ணா முதல் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் பலரும் குரல் கொடுத்து வந்துள்ளனர்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், தி.மு.க.வைச் சேர்ந்த டி.ஆர்.பாலு அவர்கள் இது தொடர்பான ஒன்றிய அமைச்சராக இருந்த போது இத்திட்டத்திற்கு புத்துயிர் கிடைத்தது.

சேது சமுத்திரத் திட்டம்: நேற்று இன்று நாளை...? ( மினி தொடர்- பகுதி - 1 ) |  A travel around sethu samuthram project: series - 1

ஆனாலும், ராமன் பாலம் என்ற பொய்யான ஒன்றைக் கூறி, பார்ப்பன சக்திகள் முட்டுக்கட்டை போட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்று தடை பெற்ற நிலையில் – தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான இத்திட்டம் செயல்படா நிலைக்கு ஆளாக்க பட்டுள்ளது.

ராமராஜ்யம் அமைக்கப் போகிறோம் என்று கூறுவோரின் ஆட்சி வந்த நிலையில், இந்தத் திட்டம் முற்றிலும் முடக்கப் பட்டுவிட்டது.

மக்கள் வளர்ச்சித் திட்டம் ஒன்று – மதக் காரணம் காட்டி முடக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கதும், வெட்கப்படத் தக்கதாகும்.

இத்திட்டத்தால் பொருளாதார ரீதியாக தமிழ்நாட்டில் – குறிப்பாக தென் மாநில பகுதிக்குப் பெரும் பலன் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறி இருந்தும் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்தக் கால்வாயால் இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து தூரம் 424 கடல் மைல் அளவுக்கு குறையும். இதன் மூலம் கிட்டத்தட்ட 25 முதல் 30 மணி நேரப் பயணம் மிச்சமாகும். வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றி இந்திய துறைமுகங்களுக்கு வருவதற்கு பதில், நேரடியாக இந்தியக் கடல் எல்லை வழியாகவே இந்தியத் துறைமுகங்களுக்கு வர முடியும். இதனால் வெளிநாட்டு கப்பல் போக்குவரத்தும் அதிகரிக்கும். இந்தியாவின் மேற்குக் கரையில் இருந்து கிழக்குக் கரைக்கும், கிழக்குக் கரையில்  இருந்து மேற்குக் கரைக்கும் செல்லும் கப்பல்கள் இலங்கையைச் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியிருப்பதால், இலங்கை அரசுக்கு ஏராளமான தொகையை நுழைவுக் கட்டணமாகவும், வாடகைக் கட்டணமாகவும் செலுத்த வேண்டியுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது இனிமேல் தேவையிருக்காது.

மேலும் அரபிக் கடலில் இருந்து இந்தியப் பெருங்கடல், இந்தியப் பெருங்கடலில் இருந்து அரபிக் கடலை அடைய வேண்டிய வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றாமல் இந்தியக் கடல் பகுதி வழியாகவே செல்லும். இதனால் இந்தியத் துறைமுகங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பலன்கள் ஏற்படும். புதிய வேலை வாய்ப்புகள் பெரும் அளவில் உருவாகும். ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் உள்ளிட்ட சிறு துறைமுக நகரங்கள் பெரும் அபிவிருத்தி அடையும்.

தூத்துக்குடி துறைமுகம் மிகப்பெரிய துறைமுகமாக மாறும் வாய்ப்பு உள்ளது. ராமேஸ்வரம் துறைமுகமும் வளர்ச்சி பெறும். இதனால் தமிழ்நாட்டில் கடல் சார்ந்த தொழில்கள் அதிகரிக்கும். கடலோர மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மீன்பிடி தொழிலும் பெரும் வளர்ச்சி காணும். மொத்தத்தில், சேது சமுத்திரத் திட்டத்தால் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களின் பொருளாதாரம் மிகவும் ஏற்ற மடையும்; வர்த்தகம் பெருகும்.

இத்தகையதோர் அரும்பெரும் திட்டத்தை – பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்பையும் மேம்படுத்தும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருமளவு ஒன்றிய அரசை வற்புறுத்தி செயல்படுத்த செய்திட ஆவன செய்யுமாறு திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 4

பத்தாம் வகுப்புத் தேர்வில் – தமிழ்த் தேர்வில் மாணவர்களின் பெருந்தோல்வி மீது ஆய்வு தேவை!

நடந்து முடிந்த 10 ஆம் வகுப்புத் தேர்வில் 47 ஆயிரம் மாணவர்கள் தமிழ்த் தேர்வில் தோல்வியுற்றனர் என்கிற தகவல் பெரிதும் அதிர்ச்சியையும், துயரத்தையும் அளிக்கிறது. இதற்கான காரணத்தின் மீது உரிய ஆய்வு ஒன்றினை நடத்துமாறு தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

இந்த நிலை தொடர்ந்தால் பண்பாட்டு நிலையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலையோடு இப்பிரச்சினையை திராவிடர் கழகப் பொதுக்குழு அணுகுகிறது.

CBSE Class 10 Board Exam 2021 results: Many students fail in school  assessment, know how they will pass

தேவையான எண்ணிக்கையில் தமிழாசிரியர்களை நியமித்து, இக்குறைபாட்டை சரி செய்ய ஆவன செய்யுமாறு, தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5

‘திராவிட மாடல்’ அரசைப் பற்றி அவதூறு பிரச்சாரத்துக்கு கண்டனம்!

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்த பிறகு வட இந்திய ஊடகங்கள் தொடர்ந்து திட்டமிட்டு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சியை மோசமான ஆட்சி என்று – வட இந்தியாவில் முக்கியமாக பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களின் மக்களிடையே வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் “ஹிந்து விரோதக் கட்சியின் ஆட்சி – ஹிந்துக் கோவில்களுக்கு கூடுதல் மின் கட்டணம்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளனர். சுதர்ஷன் செய்தித் தொலைக்காட்சி இதில் முதலிடத்தில் இருக்கிறது. இந்தத் தொலைக்காட்சியின் உண்மையான உரிமையாளர் சாமியார் ஆதித்யநாத் ஆவார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது தொடர்ந்து மத விரோத செய்திகளை மட்டுமே வெளியிட்டு வரக் கூடியதாகும்.

மின்னம்பலம்:ராமலிங்கம் படுகொலை: ஸ்டாலின், கி.வீரமணி கண்டனம்!

தமிழ்நாட்டு ஆட்சியாளரான இந்து விரோதி ஸ்டாலின் அரசினர் – மசூதிகளிலும், தேவாலயங்களிலும் யூனிட்டுக்கு ரூ. 2.15 வசூல் செய்கின்றனர் என்று செய்தி வெளியிட்டார். இந்தச் செய்தியை, இவர்களது அலைவரிசையில் இருந்து பெறப்பட்டது என்ற குறிப்போடு வடக்கே பிரபல செய்தித் தொலைக்காட்சியில் வெளியிட்டு வருகின்றன.

வட இந்திய மக்களிடையே தமிழ்நாடு அரசு குறித்த மோசமான சிந்தனையை விதைத்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு இதனைத் தடுக்காவிட்டால் இவர்கள் தொடர்ந்து இதுபோன்ற போலி செய்திகளை வெளியிட்டு, தமிழ்நாட்டிற்கு அப்பெயரை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

நாகரிகம், ஒழுக்கம், நேர்மை இல்லாத கட்சி  என்று ஒன்று உலகில் இருக்கிறது என்றால், அது சங்பரிவாரும், அதன் அரசியல் வடிவமான பிஜேபியும் தான்.

இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் என்னும் நற்பெயரை சிதைப்பது தான் அவர்களின் நோக்கமாகும்.

எங்கும் ‘திராவிட மாடல் ஆட்சி’ என்னும் சொற்கள் அதிகம் புழக்கத்துக்கு வந்து உள்ள நிலையில், இந்தச் சொல் லாட்சியானது, பார்ப்பன சக்திகளின் வயிற்றைப் பெரிதும் கலக்க ஆரம்பித்து விட்டது. இதன் தாக்கம் வெளிமாநிலங் களிலும் பரவி விடும் என்ற பயம் அவர்களை உலுக்குகிறது.

இந்தக் கட்டத்திலேயே தமிழ்நாடு அரசு இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் எண்: 6

‘அக்னி பாத்’ திட்டம் நாட்டின் பாதுகாப்புக்காக அல்ல; ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களை இராணுவமயமாக்கம் திட்டமே!

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு இப்பொழுது கொண்டு வரும் “அக்னிபாத் திட்டம்” குறித்து எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, முன்னாள் ராணுவ அதிகாரி களே கவலையுடன் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

“அக்னிபாத் திட்டத்தின்”கீழ் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ளவர்கள் ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் பணியமர்த்தப்படுவார்கள் என்ற ஒன்றிய அரசின் திட்டம் நாடு முழுவதும் குறிப்பாக பீகார், உத்திரப்பிரதேசம் முதலிய மாநில இளைஞர்களிடையே கடும் கொந்தளிப்பைக் கிளப்பியுள்ளது. ரயில்கள் கொளுத்தப்பட்ட உள்ளன. 600-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து. இவை அனைத்தும் ராணுவத்தில் சேர விருப்பம் கொண்டு தேர்வு எழுதி இன்னும் பணி கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களின் தன்னிச்சை யான போராட்டமாகும்.

Agneepath Scheme :அக்னிபத் திட்டம்: இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டம்  அறிமுகம்.. 4 வருட ஒப்பந்தத்தில் வீரர்களை பணியமர்த்த முடிவு! | Agneepath  Scheme ...

அக்னிபாத் திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் சுமார் 45,000 முதல் 50,000 வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். மேலும் பெரும்பாலானோர் நான்கு ஆண்டுகளில் சேவையை விட்டு வெளியேற்றப்படுவார்கள். மொத்த வருடாந்திர ஆள்சேர்ப்பு களில் 25 சதவிகிதம் பேர் மட்டுமே நிரந்தரமாக 15 ஆண்டுகளுக்கு தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்கிறது மோடி அரசு.

வெளியேற்றப்படும் இளைஞர்கள், பட்ட படிப்பைத் தொடர முடியாமல், ராணுவப் பணியில் தொடர முடியாமல் வேலைவாய்ப்பைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே, ராணுவத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றி வெளிவந்துள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகள் கிடைப்பது இல்லை. இந்த நிலையில் நான்காண்டு முடித்தவர்களுக்கு வேலை தரப்படும் என்ற அரசின் உறுதி எல்லாம் காற்றோடு கலந்து செல்லும் என்பது தான் யதார்த்தம்.

பா.ஜ.க. அலுவலகத்தில் பாதுகாப்பு வேலைகளில் அக்னி வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்கிறார் பா.ஜ.க. பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா. அக்னி வீரர் களுக்கு ஓட்டுநர்கள், எலக்ட்ரீசியன்கள், துவைப்பது (வாஷிங்), முடி திருத்துவது போன்ற தொழில்களுக்கான பயிற்சிகள் கிடைக்கும் என்றார் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டி.

அக்னி பாத் திட்டம் என்பது பா.ஜ. கட்சிக்கும், ஆர்.எஸ்.எஸ். சங்கத்திற்கும் எதிர்கால பயன்பாட்டிற்காக ஓர் அரை இராணுவப் படையை சட்டபூர்வமாக உருவாக்குவதே ஒழிய, வேறொன்றுமில்லை. கொம்பு மற்றும் வாள்களால் ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் பயிற்சி பெற்றவர்கள் இப்போது மக்கள் வரிப்பணத்தில் ஆயுதப் படையிடமிருந்து உயர்மட்ட ஆயுதப் பயிற்சியைப் பெறப் போகிறார்கள் என இராணுவத்தில் ஓய்வு பெற்ற அதிகாரி கூறியதைப் புறம் தள்ள முடியாது. ஜெர்மனியில் அடால்ப் ஹிட்லரும் இத்தகைய முறையைத்தான் கையாண்டார்.

ராணுவத்தில் அதிகாரி பதவிகளுக்கு கீழ் உயர்ஜாதி பார்ப்பனர்கள் ஒருவரும் சேர்வது கிடையாது. ஒடுக்கப்பட்ட சமுதாய இளைஞர்கள்தான் சேருவதற்கு ஆர்வமாகப் பயிற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு 15 ஆண்டுகால பணி, ஓய்வு தொகை (பென்ஷன்) திட்டம் அனைத்தையும் ஒழித்துக் கட்டி, பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு நான்காண்டு கால பணி, முடிந்தவுடன் ரொக்கமாக சில லட்சம் என்ற தேன் தடவிய விஷ உருண்டையைக் கொடுக்கும் நிலைதான் இது. ஒன்றிய பா.ஜ.க. அரசு, சமூகத்தில் மத வெறுப்பை தூண்டி அரசியல் செய்யும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் சதியை இளைஞர்கள் உணர்ந்து எச்சரிக்கையோடு இருத்தல் வேண்டும் எனத் திராவிடர் கழகப் பொதுக்குழு இளைஞர்களைக் கேட்டுக் கொள்கிறது. இராணுவப் பயிற்சி பெறும் இளைஞர்களை ஆர்.எஸ்.எஸ். மயமாக்கி, தங்களின் மதவாத அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கமும் இதற்குள் இருக்கிறது என்பதைப் புறக்கணிக்க முடியாது.

அனைத்து மத சார்பற்ற அமைப்புகளும் இணைந்து நாட்டு ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்திட வேண்டியதும் அவசியம் என்று இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

தீர்மானம் எண்: 7

கடந்த கால கழக தீர்மானங்கள் நிறைவேற்றப்படுதல்!

கடந்த காலங்களில் திராவிடர் கழக இளைஞர் அணி, மாணவர் கழகம், மகளிர் அணி, மகளிர் பாசறை, வழக்கறிஞர் அணி, தொழிலாளர் அணி, இந்தி எதிர்ப்பு மாநாடுகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை திட்டமிட்ட வகையில் இலக்குகளை வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8

உயர் நீதிமன்ற பதவிகள் நியமனத்தில் சமூக நீதி தேவை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75; தற்போது உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 55. இதில் 12 நீதிபதிகள் பார்ப்பனர்கள் என்பது சமூகநீதிக் கண்ணோட்டத்தில் மிகப்பெரிய அநீதியாகும். 3 சதவீத பார்ப்பனர்கள் அனுபவிக்கும் வாய்ப்பு – ஆதிக்கம் 22 விழுக்காடாகும்.

சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகள் இன்று பதவியேற்பு | nakkheeran

இந்நிலையில் காலியாக உள்ள நீதிபதிகள் பதவி களுக்குப் பார்ப்பனர்களை நியமனம் செய்திடாமல், வாய்ப்பு கிடைத்திராத பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களையே நீதிபதிகளாக நியமனம் செய்திட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக தொடர்ந்து பார்ப்பனர்களையே நியமிப்பதைத் தவிர்க்குமாறு இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *