தீர்மானங்களை நிராகரிக்க காரணம் இதுவா?… உண்மையை உடைத்த கே.பி.முனுசாமி!

ADMK

அதிமுக பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரிக்க காரணம் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதே என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே ஒற்றை தலைமை விவகாரம் வலுத்து வரும் நிலையில், இன்று அக்கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. சட்டப்போராட்டங்களுக்குப் பிறகு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்துள்ளனர்.

கூட்டத்தில் தீர்மானங்களை முன்மொழிய வந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என ஆவேசமாக அறிவித்தார். இதனை ஆமோதிக்கும் விதமாக தொண்டர்களும் பொதுக்குழுவில் ஆராவாரம் செய்தனர்.

இதனிடையே தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை கே.பி.முனுசாமி எடுத்துரைத்தார். அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்து விட்டனர். ஒற்றைத்தலைமை வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். எனவே அடுத்த எப்போது செயற்குழு- பொதுக்குழு கூடும் என்பதை விரைவில் அறிவிப்போம். அதில் ஒற்றைத்தலைமை தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *