நீதிமன்ற உத்தரவை மீறி பேனர் வைப்பு: பாஜக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு பதிவு!

தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் வைக்க கூடாது என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் ஈசா யோகா சார்பில் மண் காப்போம் திட்டம் சுற்றுப் பயணத்தின் 100 ஆவது நாள் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஈசா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவ், மற்றும் பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை வரவேற்க பாஜக சார்பில் கோவை விமான நிலையத்தில் இருந்து நவ இந்தியா வரை பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவு படி பேனர்கள் வைக்க கூடாது என்ற உத்தரவு மீறி பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை மாநகர போலீசார் அகற்றினர்.

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக பேனர் வைத்த பாஜக நிர்வாகிகள் கோபிநாத், சசிகுமார், ராஜேந்தரன், பிரதேவ் ஆதிவேல், மனோஜ் ஆறுச்சாமி ஆகியோர் மீது பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *