முன்னாள் அமைச்சர் வேலுமணி வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு!

முந்தைய ஆட்சிக் காலத்தில் சென்னை மற்றும் கோவை பகுதிகளில் டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக அமைச்சகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் 10 வாரங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த வழக்கு தொடர்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி உச்சமன்ற உத்தரவுப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெளிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு அரசின் அனுமதி வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனிடையே புகாரில் முகாந்திரமில்லை என லஞ்ச ஒழிப்பு துறையினர் அளித்த அறிக்கையின் நகலை வழங்க உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை அவர் குறிப்பிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் வசம் இருக்கக்கூடிய அறிக்கையின் நகலை வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கு ஆவணங்களை பெறுவதற்கு வேலுமணி தரப்பில் உரிமை இருப்பதாக தெரிவித்த நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆரம்ப காலகட்ட அறிக்கை நகல்களை முன்னாள் அமைச்சரிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணை வரும் 27ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *