பொதுக்குழு விவகாரம்: பதில் அளிக்க இபிஎஸ்,ஓபிஎஸ்- க்கு உத்தரவு!

அதிமுக பொதுக்குழுவிற்கு தடைவிதிக்க கோரிய வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற மனு மீதான விசாரணையை சென்னை உரிமையியல் நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக மற்றொரு வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

வரும் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி எஸ் சூரியமூர்த்தி என்பவர் அதிமுக உறுப்பினர் என கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி ஓபிஎஸ், இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்துவைத்தது.

இந்நிலையில் தனது வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரி சூரியமூர்த்தி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுக்குழுவை தள்ளி வைக்குமாறு ஈபிஎஸ்-க்கு கடிதம் எழுதி உள்ளதால் அதற்கு எதிராக விசாரிக்க கோரிய மனு காலாவதி ஆகி விட்டதாக கருத வேண்டுமென வாதிட்டார்.

அதேவேளையில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைத்துள்ளது.

மேலும், அதிமுக உட்கட்சி தேர்தலில் முறையாக நடத்தப்படாமல் நிர்வாகிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது குழுவிற்கு தடைவிதிக்க கோரி சி.பாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *