தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது பேசிய அண்ணாமலை ராகுலுக்கு எதிரான விசாரணையை திசை திருப்பவே போராட்டம் நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார். இந்நிலையில் பாஜக ஆட்சியில் மட்டும் தான் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழகத்தில் செய்து வருவதாக கூறினார்.

குறிப்பாக கழிப்பறைகள் தொடங்கி, வீடுகள், குடிநீர் இணைப்பு போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அதை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறினார். இதனிடையே கடந்த 8 ஆண்டுகளாக தமிழக பெண்கள் வளர்ச்சியில் பாஜக முக்கிய பங்கு வகிப்பதாக கூறினார். இதனிடையே திமுகவின் ஓராண்டு ஆட்சிக்காலத்தில் மக்கள் விரக்தியில் உள்ளதாக கூறினார். பொள்ளாச்சி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி. பா.ஜ.க. ஆட்சியில்தான் கொப்பரை தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயம் செய்ததாக கூறினார்.

மற்ற நாடுகளை விட இந்தியாவில் மட்டும் தான் அதிக முதலாளிகள் இருக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரிகளாக இருந்தவர் தினமும் 7 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிறகு கடத்தி மிகப்பெரிய ஊழல்வாதிகளாக ஆனதாக கூறினார். இதனால் பா.ஜ.க. சார்பில் பெரிய அளவிலான போராட்டங்கள் விரைவில் நடைப்பெறுவதாக கூறினார்.

இதனைதொடர்ந்து அமலாக்கத்துறை விசாரணையில் ராகுல் காந்தி ஆஜர் படுத்துவதன் மூலம் விசாரணையை திசை திருப்ப பார்ப்பதாகவும் அதோடு திமுக அட்சியில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார். பூஸ்டர் தடுப்பூசியில் ஆர்வம் குறைவு- அதிகாரிகள் கவலை சிறுமியின் கருமுட்டை விற்பனை போன்ற விவகாரங்கள் திமுக ஆட்சியில் தலைதூக்க ஆரம்பித்து உள்ளதாக கூறினர்.

மேலும், கச்சத்தீவை மீட்பதில் திமுக அலட்சியம் காட்டுவதாகவும் இருப்பினும் கச்சத்தீவை மீட்க பாஜக மீட்க போதுமான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தாக்குதல்களில் இருந்து மீள அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *