மாதந்தோறும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000: அமைச்சர் அதிரடி!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வது போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை திமுக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி முதல் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அண்மையில் தெரிவித்திருந்தார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டமாக மாற்றப்படுவதாக தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன் படி, அரசு பள்ளிகளில் 1 முதல் 12 வகுப்பு வரையில் படிக்கும் மாணவிகள் உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் வங்கிக்கணக்கில் நேரடியாக ரூ.1000 செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதே போல் 10- ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ செல்லும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்றும் இந்த மாணவிகள் பிற திட்டங்களில் உதவித்தொகை பெற்றிருந்தாலும் கட்டாயம் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சூழலில் இந்த திட்டம் வரும் கல்வி ஆண்டில் தொடங்க இருப்பதாகவும் இதற்கான மாணவியர் பட்டியல் சேகரிப்பு பணிகள் தொடங்கி தற்போது தயார் நிலையில் இருப்பதாக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். மேலும், இந்தத் திட்டமானது பெற்றோர்கள் மற்றும் மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *