முதல் நாள் முதல் கைது இவர் தான்?… திமுகவில் முக்கிய அமைச்சருக்கு ஸ்கெட்ச் போடும் அண்ணாமலை!

annamalai

திமுக அரசு மாறும் போது முதல் நாள் முதல் கைதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்வார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: உக்ரைன் போரிலிருந்து நாம் மீட்டு வந்த சிங்காநல்லூர் மாணவர்கள் ஆறு பேர் பயனடைந்தவர்

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்ததற்கு, அதில் தொடர்பில்லாத காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் மூலம் மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகின்றனர்

தினமும் 200 பேரை அழைத்துக்கொண்டு அழகிரி சாலையில் சென்று பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைக்கிறார் கேரளா மாநில முதல்வர் ஊழல் செய்ததாக கேராளவில் காங்கிரஸ் கட்சி ஆக்ரோசமாக போராடும் போது தமிழக காங்கிரஸ் கட்சி ஒரு கருத்தும் கூட கூறவில்லை..

காங்கிரஸ் கட்சி தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்காது ஏன்? காவல் துறையை ஏவல் துறையாக வைத்துள்ளனர்.. 21 பாஜகவினர் கைது செய்யபட்டுள்ளனர் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு 10 லட்சம் பேருக்கு ஐஏஎஸ்,ஐ.பி.எஸ் முதல் கடைநிலை ஊழியர் வரை வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

உத்திரபிரதேசத்தைப்போன்று தமிழகத்தில் அக்னி வீர் பணிக்கு சேர்ப்பதில் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். இன்னும் மூன்று வருடம் திமுக தப்பிக்கலாம். அரசு மாறும்போது முதல் நாள் முதல் கைதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு அனுப்பப்படுவார் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *