குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது..!!

இந்தியாவின் 16 வது குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (ஜூன் 15) தொடங்கியுள்ளது.  கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியாவின் 15 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவி ஏற்றார்.

இந்த நிலையில் ராம்நாத் கோவிந்த் பதவி காலம் அடுத்த மாதம் ஜூலை 24 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதியை கடந்த வாரம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணையம் அறிவிப்பின்படி குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் இன்று  (ஜூன் 15) முதல் தொடங்கி உளள்து.

So far 3,293 nominations have been filed for the Tamil Nadu Assembly  elections | தமிழக சட்டசபை தேர்தலுக்கு மனுதாக்கல் இன்று கடைசி நாள் இதுவரை  3,293 வேட்புமனுக்கள் தாக்கல்

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஜூன் 29ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்புமனுக்களை திரும்பப் பெற ஜூலை 2ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெறும். அதன்பின்னர் ஜூலை 21 ஆம் தேதிக்குள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளும் தீவிரமாக செயலாற்றி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *