தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சள் பை பெறும் திட்டம்: இன்று துவக்கம்!!

தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சள் பை பெறும் திட்டம் அரசு சார்பில் அமைச்சர் மெய்யநாதன் இன்று கோயம்பேட்டில் தொடங்கி வைக்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவித்துள்ளனர்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக இன்று தானியங்கி இயந்திரம் மூலமாக மஞ்சள் பை வினியோகம் திட்டத்தினமானது செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் இருக்கும் பேருந்து நிலையத்தில் இந்த திட்டத்தினை தமிழக சுற்றுச்சூழல் அமைச்சர் திரு.வி. மெய்ய நாதன் துவங்கி வைக்கிறார்.

குறிப்பாக பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தமிழக முதலமைச்சர் அண்மையில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து சுற்றுச்சூழல் மாசடைதல் தடுக்கப்படும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் இன்று தானியங்கி இயந்திரம் மூலம் மஞ்சள் பை பெறும் திட்டம் குறிப்பாக 10 ரூபாய் செலுத்தினாம் மஞ்சள் பை அறிமுகம் செய்யப்படும் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தப்படுகிறது.

சென்னை கோயம்பேட்டில் பொதுமக்கள் அதிகம் வரக்கூடிய முக்கியமான பகுதி ஆகும். இதனால் இந்த திட்டமானது இன்று காலை 10 மணிக்கு துவக்கப்படுகிறது. இதன் மூலம் சிறு வியாபாரிகள் அதிக அளவு மஞ்சள் பைகளை எடுத்துக்கொண்டு வியாபாரத்திற்கு பயன்படுத்தலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விரைவில் இந்த திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *