பெரியார் பள்ளி: மாணவர் கலைஞர் – கமலாலயக் கதறல்(கோவி லெனின்)

இரண்டு வாத்தியார்கள் வேகுவேகுவென நடந்து வந்து கொண்டிருந்தார்கள். காலை 10.40 மணி. அன்னைக்கு அமாவாசை.

அக்ரஹாரவாசிகள் காத்தால டிபன் சாப்பிடாமல் ‘விரதம்’ இருந்துவிட்டு, 10 மணிக்கெல்லாம் ஃபுல் மீல்ஸ் சாப்பிடுறதும், அதை, ‘ஒரு பொழுது’ன்னு சொல்றதும் சகஜம்.

அவங்க வசதிக்காக அமாவாசையன்னைக்கு காலை 10.45 மணிக்குத்தான் ஸ்கூல் ஆரம்பமாகும். அதற்குள்ளாக, கமலாலயக் குளத்தின் வடகரையிலிருந்து மேற்கு கோபுர வாசல் வழியாக தென்கரையில் உள்ள போர்டு ஹை ஸகூலுக்குப் போயாக வேண்டும்.

“இன்னும் 5 நிமிஷத்துல பெல் அடிச்சிடும் ஓய்.. வேகமா வாரும்.. என்ன யோசனையோடு நடக்குறீரு”

“இல்ல ஓய்.. நேத்தக்கி ஒரு அரை டவுசரு பையன் நம்ம தெக்கு வீதியிலே சில பொடியன்களை சேத்துண்டு ஊர்வலமா போனானே.. அவன் நம்ம ஸ்கூல் ஸ்டூடன்ட்தானே?”

“சாட்சாத் நம்ம ஸ்கூல் புள்ளையாண்டாந்தான். ஸ்கூல்ல சேர்த்துக்கலைன்னா இந்த கமலாலயக் குளத்தில் குதிச்சிடுவேன்னு ஹெட்மாஸ்டரையே ப்ளாக் மெயில் பண்ணி, சேர்ந்தானே.. அதே புண்ணியவான்தான்.”

ஆளுமைகள் - Dr Kalaignar Karunanidhi

“அவன் நம்ம ராஷ்ட்ரபாஷா ஹிந்தியை எதுத்துண்டு ஊர்வலம் போனான்னு தெரியறது. ஆனா, அவன் தமிழில் என்னவோ பாடிண்டே போனான். அதுதான் என்னன்னு தெரிய மாட்டேன்றது”

“தெரியலையா.. புரியலையா?”

“ரெண்டும்தான் ஓய்..”

அவர்களுக்கு எப்படிப் புரியும்? புரிந்தாலும் காட்டிக் கொள்வார்களா என்ன?

ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்…

நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே..

-என்பதுதான் அந்தப் பையன் பாடிய பாட்டு.

அவன் பாடப் பாட, அவனோடு சேர்ந்து ஊர்வலம் போன சிறுவர்களும் பாடிக்கிட்டே போனாங்க. அதாவது இந்தியை bodyயாக்கி பாடையேற்றுவது போலப் ‘பாடி’க்கிட்டே போனாங்க.

சாண் பிள்ளைனாலும் ஆண் பிள்ளைன்னு சொல்ற காலம் அது. அதனால, இந்தியை இளம் பெண்ணாகவும், அதன் டகால்டிக்கெல்லாம் மயங்காத ’மொரட்டு சிங்கிள்’ தமிழன்கள்தான் எங்க பசங்கன்னு சொல்வது போலவும் தினமும் திருவாரூர் தெற்கு வீதியில் ஊர்வலம் போவதும்தான் அந்த gangன் வழக்கமா இருந்தது.

Gang Leader யாருன்னு தனியா சொல்லணுமா? ஆமாமா.. நம்ம Last Bench ஸ்டூடன்ட், கலைஞர்தான்.

பிரிட்டிஷார் காலத்தில் சைமன் என்பவர் தலைமையில் இங்கிலாந்திலிருந்து ஒரு குழு வந்தது. Go Back Modi போல இந்தியா முழுக்க Go Back Simonனு காங்கிரஸ்காரங்க போராட்டம் நடத்துனாங்க. மோடிகூட குட்டிச்சுவரை உடைச்சுக்கிட்டு வெளியே போனாரு. சைமன் அப்படிக்கூடப் போகலை. வந்த வேலையை முடிச்சிட்டுத்தான் இங்கிலாந்துக்குப் போனாரு.

Explain about ' go back Simon' - Brainly.in

எந்த சைமனை காங்கிரஸ் எதிர்த்ததோ, அந்த சைமன் கமிஷனோட பரிந்துரைகள்படி 1937ல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நடந்த மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் போட்டி போட்டது. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியைத் தோற்கடிச்சி காங்கிரஸ் ஜெயிச்சுது.

மூளை ரொம்பி வழிஞ்ச ராஜாஜிதான் முதல் அமைச்சரு. அவருதான் ராஷ்ட்ரபாஷாவான ஹிந்தியைக் கட்டாயப் பாடாமாக்குவதா அறிவிச்சாரு. அதை எதிர்த்துதான் போராட்டம்.

நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தமிழறிஞர்கள் எல்லாரும் கைகோத்துப் போராடுறாங்க. ராஜாஜியோ, “நான் புடிச்சா அந்த மொசலுக்கு மூணு காலுதான்’னு அடம் புடிச்சிக்கிட்டிருந்தாரு.

Rajaji had sounded the first warning on a 'planned' economy

போராட்டம் நடத்துன பெரியாரை பெல்லாரி ஜெயிலில் போட்டுட்டாங்க. அண்ணா அப்பதான் முதன்முறையா பொதுவாழ்வில் கைதாகி, சைதாப்பேட்டை சப் ஜெயிலில் அடைக்கப்பட்டாரு.

இதெல்லாம் பாதி தெரிஞ்சும் மீதி தெரியாமலும், இந்திப் பெண்கிட்ட சிக்கிடவே கூடாதுங்கிற மொரட்டு சிங்கிளா தினமும் தன் வயசையொத்த பசங்களோடு ஊர்வலம் போய்க்கிட்டிருந்த சிறுவன்தான், கலைஞர் கருணாநிதி.

••• •••• ••••

கமலாலயக் குளக்கரையில் வேர்க்க விறுவிறுக்க நடந்து வந்த ரெண்டு வாத்தியார்களுக்கும் செம கடுப்பு.

“ஓய்.. அன்னைக்கு ஸ்கூல் அசெம்பிளியில அந்த கருணாநிதி என்ன பண்ணுனான் தெரியுமோ?” என்றார் ஒரு வாத்தியார்.

“தெரியாது ஓய்…. என்ன கருமத்தைப் பண்ணித் தொலைச்சான்?”

அந்தக் ‘கரும’த்தை வாத்தியார் ஏன் சொல்லணும்? நாமே சொல்லிடுவோமே…

போர்டு ஹைஸ்கூலின் அசெம்ப்ளி நடந்து கொண்டிருக்கிறது. தேசபக்தியோடு ‘வந்தே மாதரம்’ பாட்டுப் பாடுகிறார்கள். மாணவர்களும் சேர்ந்து பாடுகிறார்கள்.

ஒவ்வொரு க்ளாஸ் மாணவர்களும் வரிசையா நிற்கிறார்கள். நம்ம ஆளுதான் ‘க்ளாஸ்’ ஆச்சே.

M. Karunanidhi Age, Wife, Family, Caste, Death, Biography & More »  Smage dimensions

WidthtarsUnfolded

முன்னால இருந்த மாணவனின் சட்டையை லேசா இழுத்து, “நீ பாடுற பாட்டுக்கு அர்த்தம் தெரியுமா?னு கேட்குறாரு.

”எனக்குத் தமிழே ததிகிணத்தோம். இதிலே, ‘வந்தே மாதரம்’னா எப்படி தெரியும்”னு அவரு சொல்றாரு.

“அப்புறம் எதுக்குப் பாடுறே?”னு நம்மாளு கேட்குறாரு.

“பாடலைன்னா வாத்தியார் அடிப்பாரே”ங்ககுறாரு அந்த அப்பாவி ஸ்டூடன்ட்.

“பாடு.. நல்லா பாடு.. ஆனா சரியா பாடு”னு, உசுப்பேத்தி ரண களமாக்குறாரு நம்ம ஆளு.

“வந்தே மாதரம்னு சரியாத்தானே பாடுனேன்”

“அதை அப்படி பாடக்கூடாது. எப்படி பாடணும்னு சொல்லட்டுமா?”

“ம்.. சொல்லு”

”வந்து.. ஏமாத்துறோம். வந்து ஏமாத்துறோம் அப்படின்னு பாடணும்”’

“உனக்குத்தான் இதெல்லாம் சரியா தெரியும். அப்படியே பாடுறேன்”

”நீ மட்டுமில்ல… எல்லாரையும் அப்படியே பாடச் சொல்லு”

அடுத்த முறையும் ஸ்கூல் அசெம்ப்ளி கூடுகிறது.

“வந்தே.. மாதரம்”

“வந்து…. ஏமாத்துறோம்..

வந்து ஏமாத்துறோம்..” -கோரஸாக குரல் ஒலிக்கிறது

••• ••• ••• •••

மறுபடியம் கமலாலயக் குளக் கரை.

“இப்படித்தான் அந்தப் பையன் மொத்த ஸ்டூடன்ட்ஸையும் மாத்திப்புட்டான். வந்தே மாதரம்னு தேசபக்திக்காரங்க சொல்றாங்கன்னா, பிரிட்டிஷ்காரன்கிட்ட அடிமையா இருக்கிற உங்களுக்கு விடுதலை கிடைச்சாலும், நாங்க ஆட்சிக்கு வந்து.. ஏமாத்துவோம்னு சொல்றதா ஒரு பொடிப் பய நம்ப வச்சிட்டாம் ஓய்..”

“அடப்பாவி…இப்படி சொன்னா எல்லாரும் நம்புறாங்களா?

“நம்புறாளே… ’நான் சொன்னேங்கிறதுக்காக நம்பாதே.. உன் புத்தியை வச்சி யோசிச்சிப் பாரு. சரியா இருந்தா ஏத்துக்க’ன்னு அந்த ராமசாமி நாயக்கரு சொன்ன மாதிரியே இந்தப் பயலும் சொல்றான். அதை ஸ்கூலில் எல்லாப் பயலும் நம்புறான்”

“க்ளாஸ்ல அவன் எந்த Rowல உட்கார்ந்திருக்கான்?”

“நடு Row”

“அங்கே இருந்தா முன்னேயும் பின்னேயும் இருக்கிற ஸ்டூடன்ஸை டிஸ்டர்ப் பண்ணத்தான் செய்வான். அவனை last benchல தூக்கிப் போடச் சொல்லணும்”

(Last Bench அலப்பறைகள் தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *