திமுக, காங்கிரஸ், அதிமுகவில் 6 பேருக்கு வாய்ப்பு… புதிய மாநிலங்களவை எம்.பி.க்கள் இவர்களா?
திமுக, காங்கிரஸ், அதிமுக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் ஏற்க்கப்பட்டுள்ளது. சுயேட்சைகள் 7 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவைத் தேர்தல் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24 ம் தேதி துவங்கி நேற்றோடு நிறைவடைந்தது
இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்ற நிலையில் திமுக காங்கிரஸ் அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆறு பேர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.
மாநிலங்களவை தேர்தல் மனு பரிசீலனை சட்ட பேரவை செயலரும் தேர்தல் அதிகாரியுமான சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த கிரிராஜன் தஞ்சை கல்யாணசுந்தரம் ராஜேஷ் குமார் ஆகியோர் பங்கேற்றனர். அதிமுக வேட்பாளர்கள் சி.வி.சண்முகம், தர்மர் மற்றும் வழக்கறிஞர்கள் திரு. I.S.இன்பதுரை, பாலமுருகன், பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கார்த்திக் சிதம்பரம் மற்றும் மகிளா காங்கிரஸ் தலைவரான சுதா ராமகிருஷ்ணன் ஆகியோரும் பங்கேற்ற நிலையில் , நாளை மறுநாள் வேட்புமனுவை திரும்ப பெற இறுதி அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.