பாமக சாதி கட்சி கிடையாது… திமுக, அதிமுகவை வாண்ட்டாக வம்புக்கு இழுக்கும் அன்புமணி!

Anbumani

2026 பாட்டாளி மக்கள் ஆட்சி அமையும் வகையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வியூகங்கள் இருக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சி தலைவராக புதிதாக பொறுப்பேற்ற அன்புமணி ராமதாஸ் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோரை சந்திந்து வாழ்த்துப்பெற்றார்.

. சென்னை கோட்ரூர்புரத்தில் துரைமுருகனை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக தலைவராக பொறுப்பேற்றதால் மூத்த தலைவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றேன்

. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வாழ்த்து பெற்றேன். நீர் மேலாண்மை சம்பந்தமாக நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து பேசினோம்
பாலாறு தென்பென்னை ஆறு இணைக்கும் திட்டம், கொல்லிடம் ஆற்றில் தடுப்பனை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது.

காலநிலை மாற்றம் மிக முக்கிய பிரச்சனையாகும், அதற்கு இப்போது
திட்டமிட வேண்டும். காலநிலை மாற்றம் 40 ஆண்டுகள் பின்னர் மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கும் இப்போதே அதற்கு தீர்வு காண வேண்டும்.

சென்னை நாடாக இருந்திருந்தால் உலகில் 74 வது நாடாக இருந்திருக்கும் எனவே புதிதாக சென்னைக்கு 10 ஏரிகளை உருவாக்க வேண்டும். அப்போது தான்
வரும் காலங்களில் அவை உகந்த வகையில் இருக்கும். மது ,போதை பிரச்சனைக்கு எதிராக கூட்டம் நடத்த வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்

பள்ளிகூடம் செல்லும் குழந்தைகள் போதையுடன் வகுப்பறையில் அமர்கிறார்கள்.
இதனை கட்டுபடுத்த வேண்டும். ஆன்லைன் கேமை தடை செய்ய வேண்டும்
. தினமும் பலர் இதனால் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

2026 பாட்டாளி மக்கள் ஆட்சி அமையும் வகையில் செயல்படுகின்றோம்
அதற்க்கு ஏற்ற வகையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் வியூகங்கள் இருக்கும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமே மது தான் மதுவை ஒழிக்க திமுகவிற்க்கு மனசு இல்லை.

தேர்தல் அறிக்கையிலும் மதுபான கடைகளை கட்டுப்படுத்துவோம் குறைப்போம் என்றும் கூட கூறவில்லை பாமக தொடர்ந்து மதுவிலக்கை ஏற்படுத்த வலியுறுத்தி வருகிறது. பாமக சாதிகட்சி என திராவிட கட்சிகள் எங்களை சிறுமைப்படுத்த செய்த யுக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *