பெரியார், அம்பேத்கர், மாக்சியவாதிகள் ஒன்றுபடுவோம்… சனாதானத்திற்கு எதிராக அறைக்கூவல் விடுத்த திருமா!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே தனியார் கல்லூரி ஆண்டு விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது பேசியதாவது:

தமிழகத்தில் சனாதன சக்திகள் குறிவைத்து காய் நகர்த்திக் கொண்டிருக்கும் சூழ்நிலையில். சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் அவர்கள் தமிழ் மக்களை பிளவுபடுத்துகிற வேளையில் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய உணர்வாளர்கள் ஓரணியில் திரள வேண்டிய தேவையுள்ளது.

எனவே மதுரையில் செம்படை பேரணி நடத்தி முடித்துள்ளோம். கச்சத்தீவை மீட்பதற்கு தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார் அதற்கு உறுதுணையாக நாங்கள் இருப்போம் இது ஒரு கட்சியினுடைய கோரிக்கை அல்ல அனைத்து கட்சியினுடைய கோரிக்கை. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது விதியின் அடிப்படையில் தான் விடுதலை செய்யப்பட்டு உள்ளது.

இது மற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் நூல் விலையை குறைப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்துவேன். தமிழகத்தில் திமுக ஆட்சியின் உடைய ஓராண்டு சாதனையை அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்கும் வகையில் அமைந்துள்ளது.

. முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவை மீண்டும் அமைப்பதற்காக வலியுறுத்துவோம் பஞ்சமி நிலங்களை மீட்க தொடர்ந்து குரல் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *