குடியரசு தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி!!- முதல்வர் பெருமிதம்..

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சுமார் 12 அடி அகலத்தில் 16 உயரத்தில் சிலை திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த சிலையிலை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

பின்னர் கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பேசிய முதல்வர் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கலைஞரின் திருவுருவப் படத்தை மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் இழந்து வைத்ததாகவும் தற்போது கலைஞரின் சிலையை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தாக கூறினார்.

இந்திய நாட்டின் பிரதமரை உருவாக்கியதும், குடியரசு தலைவரின் பழத்தை உருவாக்கியவர் முத்தமிழர் கலைஞர் என தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார். அதோடு இந்திய அளவில் நிலையான ஆட்சி அமைவதற்கு துணை நின்றவர் என்றும் தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்து நவீன தமிழகத்தை உருவாகியவருக்கு சிலை அமைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். திராவிட முன்னேற்றக் கழகம் முதல் முதலாக 1967 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்த நேரத்தில் ஏழைக் குலத்தில் முளைத்த தமிழன் எழுகிறான் அரசு கட்டிலில் என்றும் ஏழைக்கு வாழ்வு வந்தது என்ற தலைப்பு செய்தியாக வந்ததை கலைஞர் குறிப்பிட்டார் என தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

மேலும், கலைஞர் சிலையை யார் திறப்பது என யோசித்தபோது தங்கள் மனதில் முதலில் வெங்கையாநாயுடு தான் வந்ததாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *