கரூரை தாண்ட மாட்ட பார்த்துக்கோ… அண்ணாமலையை எச்சரித்த அமைச்சர்!
பாஜக தலைவர் அண்ணாமலை சொந்த ஊரை தாண்ட முடியாது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை எனில் கோட்டையை முற்றுகையிடுவோம் என்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பகிரங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்: இது திமுக ஆட்சி. சொன்னதை செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.உங்களது மிரட்டல்களுக்கு திமுக அஞ்சாது.
கர்நாடகத்தில் உள்ள அரசுக்கு சல்யூட் அடித்த அண்ணாமலை சொந்த ஊரான கரூர் மாவட்டத்தையே தாண்ட முடியாது. கர்நாடகாவில் இருந்து காவிரி நீரைத் தமிழகத்துக்கு கொடுக்கக் கூடாது என பேசிய அண்ணாமலை, தற்போது தமிழக பாஜக தலைவர்.
இவர் தமிழகத்துக்கு என்ன செய்யப் போகிறார். மதக்கலவரத்தை உருவாக்க பார்க்கிறார் அண்ணாமலை. இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. சவாலுக்கு பயப்பட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.