மது கடைகளுக்கு விசிட் அடித்த திமுக எம்.எல்.ஏ! – ஷாக்கான வியாபாரிகள்..

மது பிரியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு தடைகளை விதித்தாலும், டாஸ்மாக் கடைகளில் வரி வசூல் என்பது அதிகம்தான். அதற்காகவே தமிழக அரசு பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை அமலுக்கு கொண்டு வருகிறது. குறிப்பாக மது பிரியர்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு அறிவித்து வருகிறது.

இந்நிலையில் மதுபானத்திற்கு கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இது குறித்து மதுபிரியர்கள் கேட்டதற்கு டாஸ்மாக் கடை உரிமையாளர்கள் எச்சரிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதனிடையே இந்த புகார் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் வந்ததாக ஆளும் கட்சியான திமுகவிற்கு துப்பு கிடைத்தது.

இதனால் அம்மாவட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் அதிரடி ஆய்வு மேற்கொண்டபோது ஒரு கடைக்கு 10,000 ரூபாய் கூடுதலாக பணம் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. அதே போல் மணவாள நகர், புட்லூர், காக்களூர், ஈக்காடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் மதுபானக் கடைகளிலும் கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் எம்எல்ஏ-விடம் புகார் அளித்தனர்.

திருவள்ளூரில் உள்ள பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்திருக்கும் கடைகளிலும் இதே போன்று கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கப்படும் என்ற தகவலை கேட்ட எம்.எல்.ஏ அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக டாஸ்மாக் மண்டல அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என எச்சரித்தார்.

மேலும், மதுக்கடைகளில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதற்கு எம்எல்ஏ தற்போது நடவடிக்கை எடுத்ததால் அப்பகுதியிலுள்ள மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *