மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை..?

மாநிலங்களவை தேர்தல் ஜூன் 10ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் 4 இடங்கள் ஆளும் கட்சியான திமுக விற்கும் 2 இடங்கள் அதிமுகவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செம்மலை ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலுக்கு பரிசீலனை செய்து வந்ததாக தெரிந்தது. அதிமுக சார்பில் இதுவரையில் எவ்வித அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், தற்போது நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தென்தமிழக வேட்பாளர்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு மாநிலங்களவை வேட்பாளர்கள் யார் என்பது குறித்து இன்று அல்லது நாளை அறிவிக்கப்படும் என அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *