வரலாற்றின் மிகப்பெரிய தவறை திமுக செய்துவிட்டது: அண்ணாமலை காரசார பேச்சு !!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருக்கும் 7 பேரும் பாஜகவை பொறுத்தவரையில் முக்கிய குற்றவாளிகள் தான் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். அதே நேரத்தில் உச்சநீதி மன்றம் பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து வருவதாக அவர் கூறினார்.

இந்நிலையில் ராஜீவ்காந்தியுடன் அன்றைய தினத்தில் 17 பேர் சேர்ந்து இறந்ததாகவும் குறிப்பாக அப்பாவி போலீசார் 8 பேர் இறந்துள்ளதாகவும் அதிலும் குறிப்பாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர் பிறந்த நாளில் இறந்துள்ளதாக கூறினார்.

இதனிடையே திமுக வரலாற்றில் தவறான முன் உதாரணத்தை எடுத்துள்ளதாகவும், காங்கிரஸ் அரசும் தன்னுடைய பலவீனத்தை காண்பிப்பது போல் இரட்டை வேடம் போடுவதாக அவர் கூறினார். குறிப்பாக காஸ்கிரஸின் முக்கிய தலைவர்கள் பல்வேறு வேடங்களில் நடித்து வருவதாக அவர் கூறினார்.

மேலும், பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக முதல்வர் கட்டியனைத்து தலுவிக்கொண்டதை சுட்டிக்காட்டிய அவர் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதை உச்சநீதிமன்றன் தெரிவித்துள்ளதை கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *