ஒன்றிய அரசிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்க முடியாது; திமுகவுக்கு சவால் விட்ட அண்ணாமலை!
சென்னை மயிலாப்பூரில் ‘திராவிட மாயை’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு மேடையில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுகவையும், அதன் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் இருக்கும் 90 சதவீத அமைச்சர்களுக்கு டெல்லிக்கு சென்றால் ஆங்கிலத்தில் பேசக்கூட முடியாதவர்கள் என விமர்சித்துள்ள அண்னாமலை,
விமானம் மூலம் ஏற்றி விட்டால் கூட தனியாக டெல்லி சென்று ஆங்கிலம் தெரியாததால் தமிழகத்திற்கான ஒரு பைசா நிதியை கூட அவர்களால் பெற்று வர முடியாது என பேசியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் தற்பொழுது அதிக அளவில் மக்கள் கேள்விகள் கேட்க ஆரம்பித்துள்ளனர் எனவே தொடர்ந்து மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் எதை பார்க்க வேண்டும்,எதை கேட்கக வேண்டும் என பல காலங்களாக அவர்கள் முடிவு செய்தார்கள், ஆனால் சமூக வளைத்தளங்களின் வளர்ச்சி காரணமாக அதனை அவர்களால் செய்ய முடியவில்லை என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.