2026 தான் இலக்கு… தமிழ்நாட்டை டார்க்கெட் செய்யும் அண்ணாமலை… என்ன பிளான் தெரியுமா?

2026 ல் தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரில் ‘திராவிட மாயை’ புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு மேடையில் சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் ,

கடந்த இரண்டு வருட நான் அரசியலுக்கு வந்த காலத்திலேயே கவனித்து பார்த்ததில் திராவிட ஆட்சி  ஒரு கூடாரம் போல் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் திராவிட தலைவர்கள் சித்தாந்தத்தை எப்படி உருவாக்கினார்களோ அதன்படி தற்பொழுது திராவிட கட்சி செயல்பட்டு வருகிறது.

2019 யில் புள்ளிவிவரங்களின் படி தமிழகத்தின் 626 கிராமங்களில் தீண்டாமை இருக்கிறது , அதிலும் திருவாரூரில் 158 கிராமங்களில் தீண்டாமை அதிகமாக கோலோங்கி இருப்பதாக கூறினார். தமிழகத்தில் சாதிய அடிப்படையில் ஆணவக் கொலைகள் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது

சம்மந்தமில்லாமல் எது நடந்தாலும் அதை திமுக வால் தான் நடந்தது என்று கூறுகிறார்கள். தமிழக 1967 க்கு முன்பாகவே அதிக அளவில் தமிழகத்தில் சாதனைகளை செய்து வருகிறது.

2024 ஆம் ஆண்டு இந்தியாவில் ஒரு மைல் கல்லாக இருக்கப் போகிறது பாஜகவை நோக்கி மக்கள் வெள்ளம் போல் திரண்டு வருகிறார்கள். 2026 ல் தமிழகத்தில் பாஜக கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் அதனை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *