பட்டினப்பிரவேசத்துக்கு போலீஸ் பாதுகாப்பு… சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு ஆணை!

pattinapravesam

பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அரசிடம் விண்ணப்பிக்க தருமபுரம் ஆதீனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டினப்பிரவேச நிகழ்ச்சியின்போது சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி, காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என சென்னையை சேர்ந்த ராஜா சிவபிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

தமிழக ஆளுநர் ரவி, தருமபுரம் ஆதீனத்துக்கு சென்று வந்த பின், சில அமைப்புகளின் நெருக்கடி காரணமாக பட்டபிரவேச நிகழ்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், அந்த அமைப்புகளால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி அரசிடம் விண்ணப்பிக்க தருமபுரம் ஆதீனத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆதீனத்தின் மனுவை பரிசீலித்து உரிய பாதுகாப்பு வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை முடித்துவைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *