கூட்டணி என்பதால் எல்லாத்துக்கு அட்ஜஸ்ட் பண்ண முடியாது… திமுகவுக்கு எதிராக சீறிய வன்னி அரசு
கூட்டணியில் இருப்பதால் நடைபெறுகின்ற கொடுமைகளை கண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைதியாக இருக்காது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலை புரம் இளங்கோ தெருவில், 256-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை இடித்துத் தள்ளும் பணி நடைபெற்று வந்த நிலையில். பொதுமக்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிராக போராட்டங்களை ஒருவாரத்திற்கு மேலாக நடத்தி வந்தனர் இரு தினங்களுக்கு முன்பு கண்ணையன் வீடுகளை இடிக்க கூடாது என்று கோரி தீக்குளித்தார் 80 சதவீதத்திற்கு மேல் தீ காயம் இருந்தது ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கண்ணையன் உடலுக்கு மரியாதை செலுத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு செய்தியாளர்களை சந்தித்தார்.
தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது திராவிட மாடல் ஆட்சி என்றால் மக்களுக்கான ஆட்சி சாமானியர்களின் ஆட்சி என கூறுகிறார்கள் ஆனால் இங்கு மண்ணின் மைந்தர்களின் நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி அரசு அப்புறப்படுத்தும் வேலை நடைபெற்று வருகிறது. இதனை முழுமையாக விடுதலை சிறுத்தைகள் சார்பாக கண்டிக்கிறோம்.
மக்கள் ஈடுபட்டிருந்த போராட்டத்தில் பாமகவின் மாநில செயற்குழு உறுப்பினர் கண்ணையன் தீக்குளித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அதற்காக தமிழக முதல்வர் 10 லட்ச ரூபாய் நிதி வழங்கியுள்ளது ஆனால் பொதுமக்கள் 50 லட்ச ரூபாய் வேண்டும் என கேட்டிருக்கின்றனர் அதனை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நில ஆக்கிரமிப்பு என கூறி மண்ணின் மைந்தர்கள் இருக்கக்கூடிய இடத்தை அரசு அதிகாரிகளை கொண்டு இடித்து வருகிறது அதனை சரி செய்வதற்கு தமிழக அரசு இந்த மக்களை இதே இடத்தில் குடியமர்த்துவதற்கான கொள்கை முடிவு வேண்டும்.
கூட்டணி கட்சியாக இருப்பதால் தமிழகத்தில் நடைபெறுகின்ற கொடுமைகளை கண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைதியாக இருக்காது என தெரிவித்தார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இங்கு இருப்பதனால் தேர்வு நடைபெறுகின்ற போது இது போன்று ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தும் செயல்களில் அரசு ஈடுபடுவது அவர்களுடைய நல்லாட்சிக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறினார்