பஞ்சாபில் இருந்து காங்கிரஸ் வெளியேற்றப்படும்… முன்னாள் முதல்வர் பேட்டி..!

பஞ்சாப் மாநிலத்தின் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அமரிந்தேர் சிங் காங்கிரஸ் பஞ்சாப் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது, நான் பாட்டியாலா தொகுதியில் வென்று விடுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதேபோல எங்களது கூட்டணி இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் வெற்றி பெறும் என நம்புகிறேன். காங்கிரஸ் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது அவர்கள் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றார்.

பாட்டியாலாவில் வாக்களித்துவிட்டு திரும்பிய அமரிந்தேர் சிங் இதனை தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் இந்த தேசத்திற்கு எதிரானவர். அவர் கெஜ்ரிவாலை ஆதரித்து வருகிறார் என்றார். மக்களிடம் இருந்து எங்களுக்கு நல்ல வரவேற்பு வருகிறது. இந்த தேர்தலில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என கூறினார்.

காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் மற்றும் பதாவுர் ஆகிய இரு தொகுதிகளில் இருந்து போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோட் சிங் சித்து அமிர்தசரஸ் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.

பஞ்சாப் மாநிலத்தில் வாக்குப்பதிவுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…