கோவையில் குண்டுகட்டாக கைது செய்யப்பட்ட எஸ்.பி.வேலுமணி… தற்போதைய நிலவரம் என்ன?

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் விடுவிக்கப்பட்டனர்.

கோவையில் தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி வெளிமாநிலத்தவர்கள் தங்கியிருப்பதாக குற்றச்சாட்டிய அதிமுகவினர், ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற தர்ணா போராட்டம் 4 மணி நேரம் நீடித்தது.

இதனையடுத்து போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அதிமுகவினர், போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலகம் முன்பு படுத்து உருண்டு போராட்டம் நடத்த எண்ணிய நிலையில், அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களான வேலுமணி, செல்வராஜ், அருண்குமார், அம்மன் அர்ஜூனன், கந்தசாமி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனையடுத்து நேற்று இரவு அனைவரும் சொந்த ஜாமீனில் வெளியே விடப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…