கோவைக்கு அவங்க வந்தே ஆகனும்… அடம்பிடிக்கும் எஸ்.பி.வேலுமணி!

துணைராணுவ படையின் பாதுகாப்புடன் கோவையில் தேர்தலை நடத்த வேண்டுமென எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், காவல்துறையும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சரும், கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். இந்நிலையில் பிரச்சாரத்தின் இறுதி நாளான இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கோவை மாவட்டம் அசாதாரண சூழ்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதாகவும், இதுவரை காணாத அளவிற்கு வெளியாட்கள் கோவை மாவட்டத்தில் தங்கவைக்கப்பட்டு பல்வேறு தேர்தல் விதிமுறை மீறல்களிலும், சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறை என்றாலே மிகவும் மோசமான வார்த்தைகளால் பொதுமக்கள் அடையாளபடுத்தி இருந்த நிலையை கடந்த அதிமுக ஆட்சியில் முழுமையாக மாற்றி, காவல்துறை என்றாலே பொதுமக்களின் நண்பன் என்ற நிலைக்கு கொண்டு சேர்த்தது அதிமுக அரசு தான் என தெரிவித்துள்ளார்.

ஆனால், இன்று குற்றவாளிகளை தண்டிக்கும் பணிகளில் ஈடுபடவேண்டிய காவல்துறையே குற்றவாளிகள் குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்தும் தகவல் கொடுப்பவர்களை தேடிசென்று வழக்கு போடுவதும், கைதுசெய்வது போன்ற அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இத்தகைய போக்கு ஜனநாயக நாட்டில், நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், பாதுகாபின்மை சூழலையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிய அவர், நேர்மையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் அப்படி நடந்து கொள்கிறதா என்ற ஒரு சந்தேகம் பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதுவரை கோவை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற கொலுசு, ஹாட்பாக்ஸ் உட்பட எத்தனை லட்சம் மதிப்புடைய பொருடகள் கைப்பற்றபட்டுள்ளது என்றோ, முறைகேட்டில் ஈடுபட்ட எத்தனைபேர் கைது செய்யப்பட்டார்கள் என்றோ எந்த தகவலும் யாருக்கும் தெரியவில்லை எனவும் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…