திமுகவுக்கு வாக்கு சேகரித்த வெளிநாட்டவருக்கு சிக்கல்!

election 2022

கோவைக்கு பணி நிமிர்த்தமாக வந்த வெளிநாட்டவர் திமுகவிற்கு வாக்கு சேகரித்து சிக்கலில் சிக்கியுள்ளார்.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 12,838 வார்டுகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், நேற்று முதலே இணையத்தில் வெளிநாட்டவர் ஒருவரின் வீடியோ வட்டமிட்டு வந்தது. அந்த வீடியோவில் இருந்த நபர் தனது பணிக்காக கோவை வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தில் பயணம் செய்தபோது பெண்கள் அனைவருக்கு டிக்கெட் எடுக்காமல் இருந்தை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளனர். இதுகுறித்து கோவையில் உள்ள திமுகவைச் சேர்ந்த தனது நண்பரும், மருத்துவருமான கோகுல் என்பவரிடம் விவரம் கேட்டுள்ளார். அதற்கு அவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மகளிருக்கு பேருந்தில் பயணிக்க இலவச திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதனால் வியந்துபோன ஸ்டெபன், நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெற வேண்டுமென தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஒரு கையில் மு.க.ஸ்டாலின் புகைப்படம், கழுத்தில் திமுக துண்டு என அசல் திமுகவினரைப் போலவே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கோவையில் இவர் வாக்கு சேகரித்த வீடியோ வைரலானதை அடுத்து புது சிக்கல் வெடித்துள்ளது.

வெளிநாட்டவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது விசா நடைமுறைகளுக்கு விரோதமானது என்பதை சுட்டிக்காட்டியுள்ள சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூதரகம். சாஸ்திரிபவன் வளாகத்தில் உள்ள மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தூதரகத்தில் அசல் ஆவணங்களுடன் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்கும் படி ஸ்டெபனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விளக்கம் ஏற்புடையதாக இல்லாத பட்சத்தில் ஸ்டெபன் மீது வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…