மத்திய நீர்வளத்துறையின் திடீர் முடிவை பாராட்டிய ராமதாஸ்!

“கோதாவரி-கிருஷ்ணா, பெண்ணாறு- காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென் மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் நாளை அவசர ஆலோசனை நடத்தவிருப்பது வரவேற்கத்தக்கது.

2022- 23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், இத்திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று கடந்த 4ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். இந்த சூழலில் 5 மாநில ஆலோசனை நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என நாளையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும்” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…