தமிழகத்திற்கே ஆபத்து… அரசை அலர்ட் செய்த அன்புமணி ராமதாஸ்!

கூடங்குளம் அணுக்கழிவுகளை அங்கேயே சேமிக்கும் திட்டத்தை கைவிடவேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் உள்ள இரண்டு அணு உலைகளின் அணுக்கழிவுகளும் அங்கேயே சேமித்து வைக்கப்படுகின்றன. இந்நிலையில், மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைக்கப்பட்டடால் தமிழ்நாட்டிற்கு பேராபத்தாக இருக்கும். எனவே அணுக்கழிவுகளை சேமித்து வைப்பதற்கான பாதாள கட்டமைப்பை ஏற்படுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் இது நடந்தால் தமிழ்நாட்டு மக்கள் பெரிதும் பதிக்கப்படுவார்கள் என்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதால் வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றம் தீர்ப்பை மதிக்காமல் மத்திய அரசு கூடங்குளம் வளாகத்தில் அணுக்கழிவை சேமிப்பது கண்டிக்கத்தக்கது என அவர் முன்பே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கூடங்குளம் மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளின் அணுக்கழிவுகளை அங்கேயே சேமித்து வைப்பதற்கான பாதாள கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து தமிழக அரசுடன் பேச தேசிய அணுமின்கழகத் தலைவர் புவன் சந்திரபதக் அடுத்த வாரம் சென்னை வருவதாக தெரிகிறது.

கூடங்குளம் அணுக்கழிவு பாதாள கட்டமைப்புக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளை முறியடிக்க வேண்டும்; பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துவது தான் அவரது பயணத்தின் நோக்கமாகும். இது தொடர்பான அழுத்தங்களுக்கு தமிழக அரசு பணியக்கூடாது!

கூடங்குளத்தில் அணுக்கழிவு பாதாளக் கட்டமைப்பை ஏற்படுத்தினால், அது தென் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறி முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதன்பின்னர் அணுக்கழிவு கட்டமைப்புக்கான எதிர்ப்பு அதிகரித்திருக்கிறது!

கூடங்குளம் அணு உலையை விட தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தான் அரசுக்கு முக்கியம் ஆகும். அதில் எந்த சமரசத்தையும் அரசு செய்து கொள்ளக்கூடாது. தமிழகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தத் திட்டத்தையும் தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது!”, என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…