அடப்பாவிகளா!! 556 கோடின்னு சொன்னீங்களே… தூங்க நகரைப் பார்த்து துக்கப்பட்ட கமல்!

தூங்க நகரத்தின் மனசாட்சி தூங்கிக்கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரையில் பல்வேறு இடங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அக்கச்சி தலைவர் கமல்ஹாசன் இன்று முதல் கட்ட பிரச்சாரமாக திருப்பரங்குன்றத்தில் தொடங்கினார். அப்போது கமல்ஹாசன் வார்டு சபை அமைத்து வார்டுகளில் செலவான கணக்குகளை மக்களிடையே நேரடியாக சொல்ல வைப்பேன் சொல்லவில்லை என்றால் நான் செய்ய வேண்டியதை செய்வேன் என்றார்.

அது மன்னிக்க கூடாத குற்றம் அதை எங்கள் கட்சியில் இருந்து யாரையும் செய்ய விடமாட்டேன். அந்த வாக்கு உறுதியுடன் தான் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்றார். ஒரு வார்டில் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்னென்ன செலவு செய்யப்பட்டுள்ளது என கூற நாங்கள் தயார் மற்றவர்கள் தயாரா.? எனக் கேட்டார்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் கட்சிக்காக நிற்கவில்லை மக்களுக்காக நிற்கின்றனர். நான் எதற்காக அரசியலுக்குள் வந்தேன் நான் வாழ்ந்ததற்கான அடையாளத்தை காட்டுவதற்காக. என்றார். மறுபடியும் வெற்றி பெற வையுங்கள் என கர்வத்துடன் போக வேண்டிய எண்ணெய் அவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லாத மாதிரி கெஞ்ச விட்டுட்டீங்க. அவர்கள் வியாபாரத்திற்காக கேட்கிறார்கள் நான் நாளைய தலைமுறை களுக்காக கெஞ்சி கொண்டிருக்கிறேன்.

மக்களுக்கு அதிகாரம் வழங்கக்கூடிய தைரியம் மக்கள் நீதி மய்யத்திற்கு மட்டும்தான் இருக்கு. மக்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் கேள்வி கேட்பதற்கும் மாற்றம் செய்வதற்கும் உங்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டும். என்பதற்காக தான். தூங்கா நகரம் என்பது மக்கள் எப்பொழுதும் தூங்காமல் இருப்பதற்கு அல்ல சந்தோசமாக தூங்காமல் இருக்க வேண்டும்.

இங்கு மனசாட்சி மட்டும் தூங்கிக் கொண்டிருக்கிறது நகரம் தூங்காமல் உள்ளது. எல்லாரும் மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டும் 556 கோடிக்கான சாயல் எங்கேயும் காணவில்லை. அது எங்கே என நீங்கள் தான் கேட்டு வாங்க வேண்டும். நீ ங்கள் பயந்து நின்றீர்கள் என்றால் அப்படியே செல்வார்கள். தைரியத்துடன் கேளுங்கள் கொரோனா விட வேகமாக தைரியம் பரவட்டும் நாளை நமது ஆகும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…