‘முதலமைச்சர் ஆம்பளையா இருந்தால் பதில் சொல்ல சொல்லுடா’… பிரச்சார கூட்டத்தில் சீறிய சிவி சண்முகம்!

CVS

திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எங்கே பார்த்தாலும் கட்டப்பஞ்சாயத்து. சென்னை, கோவை போன்ற இடங்களில் யாருமே வீடு வாங்கவோ, நிலத்தை விற்கவோ முடியாது. ஸ்டாலின் மருமகனான சபரீசனுக்கு நெருக்கமானவரை பார்த்தால் முடியும் என சி.வி. சண்முகம் பேசிக்கொண்டிருந்த போதே திமுக தொண்டரின் எதிர்ப்பு குரல் கேட்க ஆரம்பித்தது.

உடனடியாக அந்த திசையை பார்த்த சி.வி.சண்முகம் மேடையில் நின்றவாறே, “போடா… போடா… பொன்முடியைக் கூட்டிட்டு வாடா டேய்” என மைக்கிலேயே கதற ஆரம்பித்தார். தொடர்ந்து அதிமுக தொண்டர்களும் திமுகவினரை நோக்கி ஒருமையில் கத்த ஆரம்பிக்க கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே தொண்டர்களை சமாளித்த சிவிசண்முகம், வாக்காள பெருமக்களே பார்த்துக்கோங்க இது தான் திமுக, விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியாத துப்பில்லாத அரசு என தரக்குறைவாக பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், “போடா… போய் உன் பொன்முடிய மட்டும் இல்ல ஸ்டாலினையே போய் கூப்பிட்டுக்கிட்டு வா”. “இப்ப கேட்குறேன் டா உன் முதலமைச்சர் ஆம்பளையா இருந்தால் கேட்குற கேள்விக்கு பதில் சொல்ல சொல்லுடா”. “யாராட மிரட்டிப்பாக்குற, யாரா மிரட்டுற” என தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தரக்குறைவாக பேசும் வீடியோ திமுகவினரை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது.

https://www.facebook.com/100064938108150/videos/346775617306728/

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…