முதல்வர் பெயரில் முறைகேடு?…. அபாய மணி அடித்த அன்புமணி!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் விநியோகிக்கப்பட்டு வரும் விண்ணப்பம் ஒன்று பெரும் மோசடியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திமுக அரசு சட்டமன்ற தேர்தலின் போது, இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தது. ஆனால் இந்த வாக்குறுதி குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாததால், அதனை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் குடும்பத் தலைவிகளுக்கான ரூ.1000 உரிமைத் தொகை விண்ணப்பம் என்ற பெயரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகைப்படம் அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் தமிழகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

பார்ப்பதற்கு அவை அரசு விண்ணப்பமாகத் தெரியவில்லை.இத்தகைய சூழலில் பொதுமக்களுக்கு ஒரு தரப்பினர் விண்ணப்பத்தை வினியோகித்து வருகின்றனர். அதன் பின்னணியில் முறைகேடு செய்யும் நோக்கம் இருக்கலாம். இந்த மோசடிக்கு முதலமைச்சரின் பெயர் பயன்படுத்தக்கூடாது; விண்ணப்ப வினியோகத்தை தடுக்க வேண்டும்.

குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை விண்ணப்பம் வினியோகிக்கப்படுவது அரசுக்கு தெரியுமா? அவை உண்மையா, போலியா? என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மோசடியாக வினியோகிப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணித்தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…