ஸ்டாலின் ஆட்சிக்கு மார்க் போட்ட ஜெயக்குமார்… எவ்வளவு தெரியுமா?

அதிமுக ஆட்சிப்கு நூற்றுக்கு நூறு மார்க்கை தாராளமாக போடலாம் என்றும் எட்டு மாத திமுக ஆட்சிக்கு ஜீரோ மார்க் தான் போட முடியும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது மத்தியில் இருந்த திமுக அமைச்சர் காந்திச்செல்வன் தான் என்று மாஜி அமைச்சர் ஜெயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மாநகராட்சியின் 51 வது வார்டு அதிமுக வேட்பாளர் லதாவை ஆதரித்து, துலுக்காணத்தம்மன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சாமி கும்பிட்டு விட்டு எம்சி ரோடு, தொப்பை முதலி தெரு, ராபின்சன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீட் தேர்வை யார் கொண்டு வந்தது என்று விவாதிக்க நாங்கள் தயார் என்று எங்கள் ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்து விட்டனர்.இடத்தையும் நேரத்தையும் சொல்லுங்கள்.இருவரும் எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்.

நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்று நான் சொல்லவா? 2010 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த திமுக அமைச்சர் காந்திச்செல்வன் தான் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார். அதே நீட் தேர்வை ரத்து செய்து ஒருநபர் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது,அதை எதிர்த்து மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு மேல் முறையீடு செய்தது.அது நான்கு நீதிபதிகள் அமர்வுக்கு மாறியபோதும் அமைதி காத்தது திமுக.

இந்திராகாந்தி ஆட்சிக்காலத்தில்,மாநில பட்டியலில் இருந்த கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது.மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வர 17 ஆண்டுகளாக மத்தியில் கூட்டணி அரசில் இருந்த திமுக எதுவும் செய்யவில்லை.பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வராமல் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது.எட்டு மாதங்களில் திமுக ஆட்சி, அளவுக்கதிமான அதிருப்தியையும் கெட்ட பேரையும் சம்பாதித்திருக்கிறது,போலீஸாரே இரண்டிரண்டு போக வேண்டும் என்று சொன்னால் சிட்டிசன்கள் கதி என்ன? இந்த ஆட்சியில் போலீசாருக்கே பாதுகாப்பில்லை.எங்கள் ஆட்சியில் கட்டிங் இல்லை .கட்ட பஞ்சாயத்து இல்லை.எங்கள் அதிமுக ஆட்சிக்கு தாராளமாக நூறு மார்க் போடலாம்.திமுக ஆட்சிக்கு ஜீரோ மார்க் தான் போடவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…