திமுகவிற்கு திரும்பிய கு.க.செல்வம்… பாஜகவை உதறித்தள்ள காரணம் இதுவா?

திமுகவில் கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம். முன்னதாக திமுகவில் தலைமை நிலைய அலுவலக செயலர், தலைமை செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மு.க.ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த நபர் என்று கூறப்பட்ட இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

அப்போதைய சட்டமன்ற தேர்தலின் போது கு.க.செல்வம் அதிகம் எதிர்பார்த்த ஆயிரம் விளக்கு தொகுதியில் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக மருத்துவர் எழிலன் அந்த தொகுதியில் போட்டியிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த கு.க.செல்வம் திமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் பாஜகவிலும் அவருக்கு எம்.எல்.ஏ.சீட் கிடைக்கவில்லை. குறிப்பாக கு.க.செல்வம் ஆசைப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக நட்சத்திர வேட்பாளர் என குஷ்புவை களமிறக்கியது. தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமே கு.க.செல்வத்தை பயன்படுத்திக் கொண்ட பாஜக, ஒப்புக்கு மாநில செயற்குழு உறுப்பினர் என்ற பதவியை வழங்கியது. திமுகவில் செல்வாக்கு மிக்க நபராக வலம் வந்த கு.க.செல்வம், பாஜகவில் ஐக்கியமான பிறகு பெரிதாக கண்டுகொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், பாஜகவில் இருந்து விலகிய கு.க செல்வம், இன்று திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் கு.க செல்வம் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…