இனியும் எல்லை மீறினால்.. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை எச்சரித்த எடப்பாடி!

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டஉயர் அதிகாரிகளை மாறுதல்செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலை விரைவில் வர உள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே அதிமுக அரசு காவல்துறை மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. தற்போது காவல்துறை ஏவல்துறையானால் அதற்கான பலனை சந்திக்கும் என மிரட்டல் விடுக்கும் தொனியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூர் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் வாழப்பாடியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசியதாவது:

திமுகவின் 9 மாத ஆட்சியில்தமிழகம் இருண்ட மாநிலமாகிவிட்டது. சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. மக்களுக்கு எந்த பலனும்கிடைக்கவில்லை. நான் விரக்தியில் பேசுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். முதல்வராக நான் ஆசைப்பட்டதில்லை. முதல்வராக இருக்கும்போது எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். ஏதோ சந்தர்ப்பவசத்தில் ஸ்டாலின் முதல்வராகிவிட்டார் என கடுமையாக விமர்சித்தார்.

அதேபோல் அமைச்சர் கே.என்.நேரு தனது கட்சியினரை தில்லுமுல்லு செய்தாவது ஜெயிக்க வேண்டும் என கூறியதாகவும், அப்படி குறுக்கு வழியில் வெற்றி பெற வேண்டும் என்றால் எதற்காக தேர்தலை அறிவித்தீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக எப்போதுமே சட்டத்தையும், காவல்துறையையும் மதிக்கிறது. ஆனால் அவர்கள் எல்லை மீறி போனால், அதனை சந்திக்கும் துணிவு எங்களுக்கு உண்டு.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்டஉயர் அதிகாரிகளை மாறுதல்செய்வதற்கான அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாடு இருக்கிறது. அந்த நிலைப்பாடு வரும்போது,இப்படிப்பட்ட தவறு செய்ய முற்படுவோர் அதற்கான பலனை அனுபவிக்க வேண்டியது வரும். அதனால், யாரும் அப்படி செய்யமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

மேலும் காவல்துறையினர் மக்கள் ஜனநாயகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பவர்களாக இருக்க வேண்டும். வேட்பாளரை மிரட்டுவது, பொய் வழக்கு போடுவது என்பதையெல்லாம் விட்டுவிட்டு, நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என விமர்சித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

மத்திய அரசால் மூன்று முறை தடை செய்யப்பட்ட இயக்கம்தான் ஆர்எஸ்எஸ் – திருமுருகன் காந்தி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கொண்டுவரும் சட்டங்களையும், திட்டங்களையும் தடுக்க ஆளுநருக்கு எந்த உரிமையும்…