சூடுபிடிக்கும் தேர்தல் களம்: உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட  வாக்குப்பதிவு

இந்தியாவில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலில், நாளை உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தேர்தல் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அங்கு  மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு, நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதி வரை  7 கட்டங்களாக  தேர்தல் நடைபெறவிருக்கிறது.இந்த தேர்தலில் பா.ஜ.க.,  சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்தனியே களம் காணவுள்ளது.

இதில்  ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையேதான் ‘நீயா, நானா ?’ போட்டி நிலவுகிறது. பா.ஜ.க.வுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சமாஜ்வாடி கட்சிக்காக அதன் தலைவர் அகிலேஷ்யாதவும், பகுஜன் சமாஜூகாக அந்தக் கட்சியின் தலைவர் மாயாவதியும், காங்கிரசுக்காக அந்தக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்காவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் முதல் கட்டதேர்தல் நடைபெறும் 11 மாவட்டங்களில் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இதையடுத்து 58 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் 623 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை 2.27 கோடி வாக்காளர்கள் நாளை தீர்மானிக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…

மூன்று நாட்களாக கட்டணமில்லாமல் கடந்து செல்லும் வாகனங்கள், டோல்கேட் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் 

பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடியில் மூன்று நாட்களாக அனைத்து ஊழியர்களும் பணிகளை புறக்கணித்து உள்ளிருப்பு…