இதுல யாரு காப்பி அடிச்சுருப்பா –  காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை

உத்தர பிரதேச மாநிலத்தில் வரும் 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்ட தேர்தல் நடக்க ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் காங்கிரஸ்  கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்  இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சம்  :

  1. எந்தவிதமான நோய்க்கும் ரூ.10 லட்சம் வரை அரசு உதவி வழங்கப்படும்.
  1. 20 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும். பாஜக அரசாங்கத்தில் 12 லட்சம் வேலைகள் காலியாக இருக்கிறது. அதை நிரப்புவது மட்டுமின்றி கூடுதலாக 8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
  1. ஆட்சிக்கு வந்தால், நெல் ரூ.2,500க்கும், கரும்பு ரூ.400க்கும் வாங்கப்படும்
  1. ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  1. மின்சாரக் கட்டணம் பாதியாக குறைக்கப்படும்.
  1. கோவிட் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும்
  1. 10, 12 ஆம் வகுப்பு பயிலும் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள்
  1. கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்
  1. மாட்டு சாணம் இரண்டு ரூபாய்க்கு விற்கப்படும்.

கடந்த செவ்வாயன்று சமாஜ்வாடி, பாஜக கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டன.

Leave a Reply

Your email address will not be published.

இந்தோனேசியாவில் பயங்கரம்!! கால்பந்து மைதானத்தில் மோதல்… 127 பேர் பலி!!

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மைதானத்திற்குள் புகுந்து தாக்கியதால் ஏற்பட்ட வன்முறையில்…

ஓடும் ரயிலில் அமைச்சருக்கு திடீர் உடல் நலக்குறைவு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு ஓடும் ரயிலில் திடீர் உடல் நலக்குறைவு. சிதம்பரம்…

இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளரை தென்னை மட்டையால் அடித்தே மட்டையாக்கிய 12 பேர் கைது

கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளராக உள்ள…