சபாநாயகர் சொன்னதுமே பொசுக்கென வெளியேறிய பாஜக… என்ன விளக்கம் கொடுத்தாங்க தெரியுமா?

நீட் தேர்வு மூலமாக அனைத்து சமூகத்திற்குமாப சமூகநீதி காக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்டமன்ற சிறப்பு கூட்டத்தில் பங்கேற்ற பாஜகவினர் தீர்மானத்தின் மீது தங்களுக்கு உடன்பாடு இல்லை எனக்கூறி வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: ட் தேர்வை ரத்து செய்ய திமுக அரசால் இரண்டாம் முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது ஏற்கனவே அதிமுக ஆட்சியில் இருக்கும்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டு ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட தீர்மானத்தை இன்று மீண்டும் சட்டப் பேரவையில் திமுக அரசு கொண்டுவந்துள்ளது இது தேவையானதா என்று பாஜக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வால் சமூக நீதிக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர் ஆனால் இன்று நீட் தேர்வு மூலமாக அனைத்து சமூகத்திற்குமாப சமூகநீதி காக்கப்பட்டுள்ளது

திமுக அரசு அரசியல் லாபத்திற்காக இந்த தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது இது ஏற்புடையது அல்ல எனவே பாஜக இதனை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது. .அதிமுக ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் மாணவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர்.

அரசியல் கண்துடைப்புக்காகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது இதன் மூலம் மக்களுக்கும் மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை.ஏ கே ராஜன் குழு அறிவிக்கப்பட்டபோதே நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களை அவர் பதிவிட்டுள்ளார் இதன் மூலம் அவரின் அறிக்கை எவ்வாறு நியாயமாக இருக்க முடியும் என்றும் ஒரு தலைப் பட்சமாகவே அவரது அறிக்கை அமைந்திருக்கிறது என்றும் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்துவதை தவிர்க்கவே மத்திய அரசால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்டதாக இருந்தாலும் இதன் மூலம் மக்களுக்கு நன்மை இருக்கும் என்றால் அதனை வரவேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

“அவங்களுக்கு அரசியல், மானம், நேர்மை இதெல்லாம் கிடையாது”… உடன்பிறப்புகளை உஷார்படுத்திய ஸ்டாலின்!

நச்சு சக்திகளுக்கு சிறிதும் இடம் கொடுக்காத வகையில் திமுகவினர் பொறுபுடன் நக்குமாறு முதலமைச்சர்…

#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள்…