‘இந்த விஷயத்தில் அது வேண்டாம்’… திமுகவுடன் ஒத்துப்போக முடிவெடுத்த அதிமுக!

நீட் தேர்வு எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் விலக்கு கோரும் சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றிய விஜயபாஸ்கர் கூறியது: அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு விலக்கு பெற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பல்வேறு அரசியல் அழுத்தத்திற்கும் இடையில் சட்டப் போராட்டங்களை மேற்கொண்டோம். அந்த வேளையில் மருத்துவப் படிப்பில் கிராமப்புற மாணவர்களுக்காக 7.5% இடஒதுக்கீட்டை கொண்டு வந்தது அதிமுக அரசு. அதனால்தான் இன்று குப்பன், சுப்பனின் மகனும், மகளும் மருத்துவராகும் கனவு நனவாகி உள்ளது. நீட் தேர்வு எதிர்ப்புக் கொள்கையில் அதிமுக உறுதியாக உள்ளது. நீட் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்பதுதான் எனது நிலைப்பாடும் கூட. நீட் விவகாரத்தை சட்டரீதியாக நுணுக்கத்தோடு அணுக வேண்டும்” என்றார் விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர் பேச்சின்போது குறுக்கிட்டுப் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீட் தேர்வு தமிழகத்தில் எனது ஆட்சிக் காலத்தில் அமலுக்கு வந்ததுபோல் அவதூறு பிரச்சாரத்தை எதிர்க்கட்சியை மேற்கொள்கின்றனர். நீட் தேர்வு எப்போது வந்தது என்ற உண்மையைத்தான் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்” என்றார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, “விஜயபாஸ்கர் பேசிய அனைத்தும் அவைக் குறிப்பில் இருக்கிறது. ஒன்றும் பிரச்சினை இல்லை. நீங்கள் அமரலாம்” எனக்கூறியதை அடுத்து எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்தார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…