‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதற்குப் பாராட்டுகள்-  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

ஆறே நாள்களில் புயல் வேக நடவடிக்கையின் மூலம் ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது மற்ற மாநிலங்களுக்கு ஒரு புதிய வெளிச்சம்;  ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை அகிலத்திற்கும் அறிவித்ததற்குப் பாராட்டுகள் – வாழ்த்துகள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், “சமூகநீதி, பெண்ணுரிமை, ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமை, மாநில உரிமை – மக்களாட்சி உரிமை போன்ற பல தத்துவ விளக்கங்களை உள்ளடக்கியதாக மாண்புமிகு முதலமைச்சரின் உரையும், ஒருமித்த கருத்துகளை வழங்கிய மாண்பமை சட்டமன்ற கட்சித் தலைவர்களின் உரைகளும் அமைந்து, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட வரைவினை மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி  ஆளுநருக்கே திருப்பி அனுப்பியது வரலாற்றுக் குறிப்பாகும்.திராவிடர் இயக்கம்- நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர்களும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கலைஞரும் மறையவில்லை; வாழ்பவர்களே என்பதன் அடையாளம் இது!  

மறுமுறை காலந்தாழ்த்தாமல் – புயல் வேகத்தில் – சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் – சட்டமன்ற சிறப்புக் கூட்டம் இவற்றை ஆறே நாள்களில் கூட்டி – ‘நீட்’ விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது ‘அதிசயம் ஆனால், உண்மை!’ என்று வியக்கும் வண்ணம் வேக நடவடிக்கைகளாக நடந்தன.

சமூகநீதி, மாநில உரிமைக் கொள்கைகளை மீண்டும் பாய்ச்சலோடு வேகமெடுக்கச் செய்தமைக்கு ஆளுநரின் அரசமைப்புச் சட்ட மீறிய செயல் தூண்டுதலாய் அமைந்துள்ளது.மக்களாட்சி முறையோடும், மாண்போடும் உரிமைக் குரல் எழுப்பி, உறவுக்குக் கை கொடுக்கும் உயர் மனிதர்கள் ஆட்சி ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பது – அகிலத்திற்கும் அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…